தமிழகத்துக்கு காவிரி தண்ணீர் கண்டிப்பாக வரும் அமைச்சர் உதயகுமார் பேச்சு


தமிழகத்துக்கு காவிரி தண்ணீர் கண்டிப்பாக வரும் அமைச்சர் உதயகுமார் பேச்சு
x
தினத்தந்தி 20 April 2018 4:15 AM IST (Updated: 20 April 2018 2:12 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்துக்கு காவிரி தண்ணீர் கண்டிப்பாக வரும் என்று ஆரணியில் நடந்த பொதுக் கூட்டத்தில் அமைச்சர் உதயகுமார் பேசினார்.

ஆரணி,

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் ஆரணியை தலைமையிடமாக கொண்டு வருவாய் கோட்ட அலுவலகம் (உதவி கலெக்டர் அலுவலகம்) வழங்கியமைக்கும், ஜமுனா மரத்தூர் புதிய தாலுகா அலுவலகம் அமைக்க உத்தரவு வழங்கியதற்கும் முதல்-அமைச் சர் எடப்பாடி கே.பழனி சாமிக்கும், துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கும் நன்றி தெரிவித்து பொதுக்கூட்டம் ஆரணி அண்ணா சிலை அருகே நடந்தது. அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.

ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் வக்கீல் கே.சங்கர், ஜெயலலிதா பேரவை நிர்வாகி பாரி பி.பாபு, மாவட்ட பாசறை செயலாளர் ஜி.வி.கஜேந்திரன், பாசறை நிர்வாகி பி.ஜி.பாபு, ஒன்றிய செயலாளர்கள் பி.ஆர்.ஜி.சேகர், எம்.வேலு, எம்.பாண்டியன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சேவூர் ஜெ.சம்பத் ஆகியோர் முன் னிலை வகித்தனர். நகர செயலாளர் அசோக்குமார் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பேசிய தாவது:-

ஒரு வருவாய் கோட்டம் புதிதாக அறிவிக்கப் படும் போது பரப்பளவு, மக்கள் தொகை கணக்கிட்டுதான் செய்வார்கள். ஆனால் இங்கு மலைவாழ் பகுதிக்கு வழங்கப் பட்ட சலுகையின் அடிப் படையில்தான் ஜமுனா மரத்தூர் புதிய தாலுகா உருவாக்கப்பட்டது.

அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் எப்போது பார்த்தாலும் ஆரணியில் உதவி கலெக்டர் அலுவலகம் எப்போது வரும் என்றுதான் கேட்பார். அதன்படி இன்று புதிதாக ஒரு தாலுகா அலுவலகம் உருவாக்கப்பட்டு அதனடிப்படையில் இங்கு புதிய வருவாய் கோட்ட அலுவலகம் வழங்கப் பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டுள் ளது. 1924-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதை 50 ஆண்டுகாலம் கழித்து 1974-ல் தி.மு.க. ஆட்சியின்போது புதுப் பிக்காததால்தான் இந்த பிரச் சினை தொடர்ந்து நீடித்து வருகிறது. மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா காவிரி நடுவர்மன்ற தீர்ப்பினை அரசிதழில் வெளியிட நட வடிக்கை எடுத்தார்.

தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் கண்டிப்பாக வரும். காவிரி பங்கீட்டு பிரச்சினை என்பது பொதுப் பிரச்சினை, கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். இப்போது கூட பாராளுமன்றகூட்டத் தொடரில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கூட்டத் தொடர் முழுவதுமே தனி கவனம் செலுத்தும் வகையில் போராட்டங்கள் நடத்தப் பட்டது.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் முக்கூர் என்.சுப்பிர மணியன், மாவட்ட செய லாளர்கள் தூசி கே.மோகன் எம்.எல்.ஏ., பெருமாள்நகர் கே.ராஜன், பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., மகளிரணி மாநில துணை செயலாளர் எல்.ஜெயசுதா, மாவட்ட துணை செயலாளர் ரமணிநீலமேகம் உள்பட நிர்வாகிகள், பொது மக்கள் கலந்து கொண்டனர். முடிவில் சைதை கே.சுப்பிர மணி நன்றி கூறினார்.


Next Story