ஊருக்குள் புகுந்த காட்டெருமை தாக்கி பெண் உள்பட 2 பேர் படுகாயம்
அருமனை அருகே ஊருக்குள் புகுந்த காட்டெருமை தாக்கி பெண் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
அருமனை,
குமரி மாவட்டம் அருமனை அருகே சிற்றார் வனப்பகுதியில் யானை, காட்டெருமை உள்பட ஏராளமான விலங்குகள் உள்ளன. இவை அவ்வப்போது ஊருக்குள் புகுந்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகிறது. இதில் காட்டு யானைகள் ரப்பர் தோட்டம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து பொதுமக்களை தாக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கிறது.
இந்தநிலையில், நேற்று காலை 9 மணியளவில் சிற்றார் வனப்பகுதியில் இருந்து ஒரு காட்டெருமை வழிதவறி பொதுமக்கள் வசிக்கும் ஆலஞ்சோலை, கைதக்கல் பகுதிக்குள் புகுந்தது. அந்த பகுதியில் ஏராளமான ரப்பர் தோட்டங்கள் உள்ளன. இந்த தோட்டங்களில் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.
2 பேர் படுகாயம்
வேகமாக வந்த காட்டெருமை பால்வடிப்பு பணியில் ஈடுபட்டிருந்த அச்சுதன் என்பவரை கொம்பினால் தூக்கி வீசி விட்டு வேகமாக ஓடியது. இதில் படுகாயம் அடைந்த அச்சுதனை சக தொழிலாளர்கள் மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
தொடர்ந்து, அந்த காட்டெருமை கடையல், பீலிக்கோடு பகுதிக்கு சென்றது. அங்கு ரப்பர் தோட்டத்தில் பணியில் ஈடுபட்டிருந்த விமலா ராணி (48) என்பவரை தாக்கி விட்டு ஓடியது. படுகாயம் அடைந்த விமலா ராணி கடையாலுமூட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது
இதையடுத்து அந்த காட்டெருமை களியல் சந்திப்பு, வனத்துறை அலுவலகம் என ஊருக்குள் பல இடங்களில் சுற்றி திரிந்து இறுதியில் களியல் பாலத்தின் அருகே தாமிரபரணி ஆற்றின் கரையில் சென்று படுத்து கொண்டது. தகவல் அறிந்த வனத்துறையினரும், தீயணைப்பு துறையினரும் காட்டெருமையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இரவு வெகுநேரமாகியும் காட்டெருமையை பிடிக்க முடியவில்லை. 3 முறை துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தப்பட்டது. இதில் 1 மயக்க ஊசி மட்டும் காட்டெருமையை தாக்கியது. எனினும் அந்த காட்டெருமை மயக்கம் அடையாமல் இருந்தது. இரவு 10 மணிக்கு 4-வது முறையாக மயக்க ஊசி செலுத்தப்பட்டது. இதில் காட்டெருமை மயங்கியது. இதனையடுத்து காட்டெருமையை வனப்பகுதியில் கொண்டு சென்று விடுவதற்கான நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story