ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 19 வீடுகள்-6 கடைகள் அகற்றம்
பூவாளூர் பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 19 வீடுகள் மற்றும் 6 கடைகள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் அகற்றினர்.
லால்குடி,
லால்குடியை அடுத்த பூவாளூர் பேரூராட்சியில் மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலையின் இருபுறமும் ஆக்கிரமிக்கப்பட்டதால் போக்குவரத்திற்கு மிகவும் இடையூறாக உள்ளதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருச்சி மாவட்ட கலெக்டரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து திருச்சி மாவட்டத்தில் நெடுஞ்சாலை பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று கலெக்டர் ராஜாமணி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து லால்குடி கோட்டாட்சியர் கோவிந்தராஜுலு அறிவுறுத்தலின்படி சம்பந்தப்பட்டவர்கள் தாமாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள முன்னறிவிப்பு செய்யப் பட்டது.
வீடுகள்-கடைகள் அகற்றம்
அப்படியும் ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் நேற்று லால்குடி நெடுஞ்சாலை உதவி இயக்குனர் ஹரிகிருஷ்ணன், உதவி பொறியாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நெடுஞ்சாலை பணியாளர்கள் 20-க்கும் மேற்பட்டோர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பொக்லைன் எந்திரம் உதவியுடன் பூவாளூரில் திருச்சி-அரியலூர் சாலையில் இருந்து பூவாளூர் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 19 வீடுகள், 6 கடைகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றினார்கள். ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டபோது பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்க லால்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

Related Tags :
Next Story