மக்கும் குப்பையில் தயாரிக்கப்பட்ட உரங்கள்


மக்கும் குப்பையில் தயாரிக்கப்பட்ட உரங்கள்
x
தினத்தந்தி 20 April 2018 3:20 AM IST (Updated: 20 April 2018 3:20 AM IST)
t-max-icont-min-icon

ஜோலார்பேட்டை நகராட்சியில் மக்கும் குப்பையில் தயாரிக்கப்பட்ட உரங்கள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.

ஜோலார்பேட்டை,

ஜோலார்பேட்டை நகராட்சியில் உள்ள 18 வார்டுகளில் சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகள் உரக்கிடங்கில் சேமித்து வைக்கப்படுகிறது.

மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனர் விஜயகுமார் உத்தரவின்படி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் 1½ டன் மக்கும் குப்பைகளை கொண்டு, நுண்ணுயிர் உரம் தயாரிக்கப்பட்டது. அவற்றை தலா 2 கிலோ வீதம் பாக்கெட் தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நகராட்சி ஆணையாளர் விசாலாட்சி தலைமை தாங்கி, பொதுமக்களுக்கு உரங்களை வழங்கினார். நகராட்சி பொறியாளர் கோபு, சுகாதார ஆய்வாளர் உமாசங்கர் உள்பட நகராட்சி பணியாளர்கள் உடனிருந்தனர்.

இந்த நுண்ணுயிர் உரங்களை பொதுமக்கள் தங்கள் வீடு மற்றும் மேல்மாடிகளில் செடிகளை வளர்த்து வருபவர்கள் இலவசமாக வாங்கி பயன்படுத்தி கொள்ளலாம். விரைவில் விவசாயிகளுக்கு இலவசமாக நுண்ணுயிர் உரங்கள் வழங்கப்படும் என்று நகராட்சி ஆணையாளர் விசாலாட்சி தெரிவித்தார்.


Next Story