தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை இன்று முதல் 2 மாதங்களுக்கு நடக்கிறது


தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை இன்று முதல் 2 மாதங்களுக்கு நடக்கிறது
x
தினத்தந்தி 21 April 2018 2:15 AM IST (Updated: 20 April 2018 6:55 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாநகராட்சியில், தெரு நாய்களுக்கு இன்று முதல் 2 மாதங்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை நடைபெற இருப்பதாக, மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாநகராட்சியில், தெரு நாய்களுக்கு இன்று முதல் 2 மாதங்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை நடைபெற இருப்பதாக, மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–

கருத்தடை அறுவை சிகிச்சை 

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் சுற்றித்திரியும் தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும், பொதுமக்களை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதன்படி நேற்று முதல் 2 மாதங்களுக்கு தெருவில் சுற்றித்திரியும் சுமார் 2 ஆயிரம் தெருநாய்களுக்கு கருத்தடை செய்யவும், வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு மாநகராட்சி மூலம் இலவசமாக தடுப்பூசி போடவும் தீர்மானிக்கப்பட்டு உள்ளது.

வீட்டு நாய்களுக்கு தடுப்பூசி 

அதன்படி விலங்குகள் நலவாரியம் அங்கீகாரம் பெற்ற தனியார் நிறுவனமும், தூத்துக்குடி மாநகராட்சியும் இணைந்து மாவட்ட கால்நடை இணை இயக்குனர் கண்காணிப்பில் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள கருத்தடை அறுவை சிகிச்சை மையத்தில் தடுப்பூசி போடும் பணி மற்றும் கருத்தடை அறுவை சிகிச்சையும் நடக்கிறது.

இதனால் பொதுமக்கள் தங்கள் வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு விசர் தடுப்பூசி போட்டு, தங்களை விசர் நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும், என அவர் தெரிவித்து உள்ளார்.

நாய்கள் பிடிக்கும் பணி 

இதைத் தொடர்ந்து நேற்று மாநகராட்சி பகுதியில் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்கும் பணி தொடங்கியது. நேற்று 22 தெருநாய்கள் பிடிபட்டன. இதில் 15 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மற்ற நாய்களுக்கு இன்று அறுவை சிகிச்சை நடக்கிறது. இந்த பணி தொடர்ந்து 2 மாதங்களுக்கு நடைபெறுகிறது.


Next Story