zவடக்கன்குளம் அதிசய விநாயகர் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம் திரளான பக்தர்கள் தரிசனம்
வடக்கன்குளம் அதிசய விநாயகர் கோவிலில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
வடக்கன்குளம்,
வடக்கன்குளம் அதிசய விநாயகர் கோவிலில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
அதிசய விநாயகர்
நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் அம்பாள்நகர் அதிசய விநாயகர் கோவிலில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா நேற்று காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடி மரத்துக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து கொடி மரம் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழா தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் காலை, மதியம், மாலை வேளைகளில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனையும், காலை 9.45 மணிக்கு யாக பூஜையும், அதனை தொடர்ந்து பாலாபிஷேகம், சந்தன காப்பு, புஷ்பாஞ்சலி ஆகியனவும் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் மாலை 5 மணிக்கு மேல் அதிசய விநாயக பெருமான் வீதிஉலா நடக்கிறது.
7–ம் திருநாளான 26–ந்தேதி (வியாழக்கிழமை) அன்று சண்முகர், நடராஜருக்கு சிவப்பு சாத்தி வீதிஉலாவும், 27–ந்தேதி காலை 7.30 மணிக்கு சண்முகருக்கு வெள்ளை சாத்தியும், மாலையில் சண்முகர்– வள்ளி தெய்வானைக்கு பச்சை சாத்தியும் வீதிஉலா நடக்கிறது. 9–ம் திருநாளன்று சிவசுப்பிரமணிய சுவாமி, வள்ளி– தெய்வானை சமேதராய் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.
தேரோட்டம்
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 29–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு ஒரு மணிக்கு மின்னொளி அலங்காரத்தில் அம்பாள் தேவி தேரோட்டம் நடைபெறும். அன்று திருவிழா காணவரும் பக்தர்களுக்கு இரவு 8 மணி முதல் தேரோட்டம் தொடங்கும் வரை அன்னதான மண்டபத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு நாளும் இரவு 8 மணிக்கு சமய மாநாடு, 9 மணிக்கு சிறப்பு கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. 2–ம் திருநாளில் இந்து சமய மாதர் மன்றம் நடத்தும் சிறப்பு கலைநிகழ்ச்சிகளும், 7, 8, 9, 10–ம் திருநாட்களில் பல்வேறு போட்டிகளும் நடக்கிறது.
திருவிழா ஏற்பாடுகளை சித்திரை திருவிழா திருப்பணிக் குழுவினரும், அதிசய விநாயகர் ஆலய நிர்வாக சங்கத்தினரும் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story