பெரம்பலூரில் போக்குவரத்து விதிகளை மீறி இயக்கிய 22 வாகனங்களுக்கு அபராதம்
பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட 22 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
பெரம்பலூர்
போக்குவரத்து ஆணையர் உத்தரவின்பேரில் பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலர்(பொறுப்பு) ஜெயதேவ்ராஜ் தலைமையில் துணை போக்குவரத்து ஆணையர் அலுவலக செயலாக்க வட்டார போக்குவரத்து அலுவலர் கணேசன் ஆகியோர் பெரம்பலூர் மாவட்ட எல்லையில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி இயக்கப்படும் வாகனங்களை கண்காணிக்க வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அதிகவேகமாகவும், சரக்கு வாகனங்களில் அதிக ஆட்களை ஏற்றி செல்லுதல் போன்ற போக்குவரத்து விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட 22 வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கை வழங்கி ரூ.15ஆயிரத்து 400அபராதம் விதிக்கப்பட்டது. இந்த வாகன தணிக்கை தொடர்ந்து நடைபெறும். அதிவேகமாக செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயதேவ்ராஜ் தெரிவித்தார்.
வாகன தணிக்கையின்போது மங்களமேடு போலீஸ் துணை சூப்பிரண்டு பிரகாஷ், வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் செல்வராஜ், பெரியசாமி மற்றும் பிரபாகரன், மற்றும் போலீசார் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story