விருத்தாசலம் அருகே குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்
குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து விருத்தாசலம் அருகே கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் ஒன்றியத்துக்கு உட்பட்டது மு.பரூர் கிராமம். இந்த கிராம மக்களுக்கு ஆழ்துளை கிணற்றில் இருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏற்றி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இப்பகுதியில் புதிதாக மற்றொரு குடிநீர் இணைப்புக்கு குழாய் பதிக்கப்பட்டதாக தெரி கிறது. இதன் பின்னர், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் மு.பரூர் காலனி பகுதிக்கு சரியான முறையில் குடிநீர் வினியோகம் செய்ய முடியாமல் போனது.
கடந்த 6 மாதமாக இதே நிலை நீடித்து வரும், நிலையில் இதுகுறித்து ஒன்றிய அதிகாரிகளிடம் பல முறை காலனி பகுதி மக்கள் மனு கொடுத்தும் இதுவரையில் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் நேற்று காலிகுடங்களுடன் அந்த கிராமத்தில் விருத்தாசலம்-சிறுவம்பார் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த மங்கலம்பேட்டை போலீசார் விரைந்து வந்து, குடிநீர் பிரச்சினையை தீர்க்க அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து அனைவரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story