மேட்டுப்பாளையத்தில் பரபரப்பு: இந்து முன்னணி நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு
மேட்டுப்பாளையத்தில் இந்து முன்னணி நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இது தொடர்பாக மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மேட்டுப்பாளையம்,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காட்டூர் பெருமாள் லே-அவுட் 2-வது தெருவை சேர்ந்தவர் தனபால் (வயது 30). மேட்டுப்பாளையம் நகர இந்து முன்னணி துணைத்தலைவர். மேலும் இவர் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.
இவருடைய மனைவி நளினி (29). இவர்களுக்கு காவண்யா (11) சஞ்சய் (8) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். இவர்களுடன் தனபாலின் மாமியார் தேன்மொழியும் (52) வசித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து தனபால் வீட்டுக்கு வந்தார். அவர் தனது கார் மற்றும் மொபட்டை வீட்டு வளாகத்தில் நிறுத்தி விட்டு தூங்க சென்றார். நேற்று அதிகாலை தனபாலின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் வீட்டின் முன் நிறுத்தி இருந்த காரின் மேல் போடப்பட்டு இருந்த தார்ப்பாய் மற்றும் அருகில் நிறுத்தப்பட்டு இருந்த மொபட் ஆகியவை எரிந்து சேதமடைந்து இருந்தது.
நேற்று காலையில் தேன்மொழி வீட்டின் வளாகத்தை பார்த்த போது சிகரெட் துண்டுகள், தீக்குச்சிகள் சிதறி கிடந்தன.
இதனால் சந்தேகம் அடைந்த தேன்மொழி சுற்றிப்பார்த்த போது காரில் போடப்பட்டு இருந்த தார்ப்பாய் மற்றும் மொபட் சேதம் அடைந்திருந்தது. இதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் இது பற்றி தனபால் மற்றும் குடும்பத்தினரிடம் தெரிவித்தார்.
இது குறித்த தகவல் அறிந்த கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி, போலீஸ் துணை சூப்பி ரண்டுகள் மணி, குணசேகரன், இன்ஸ்பெக்டர் சென்னகேசவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்த சம்பவத்தில் துப்பு துலக்க கோவையில் இருந்து தடயவியல் நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். கோவையில் இருந்து போலீஸ் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. சம்பவ இடத்தில் இருந்து மோப்பம் பிடித்து சென்ற நாய் சிறிது தூரம் ஓடிச்சென்றது. ஆனால் அது யாரையும் கவ்விப் பிடிக்க வில்லை.
போலீசார் நடத்திய விசாரணையில், தனபாலின் வீட்டின் மீது மர்ம ஆசாமிகள் பெட்ரோல் குண்டு வீசி உள்ளனர். அது வீட்டு முன்நிறுத்தப்பட்டு இருந்த கார் மீது விழாமல் சற்று தள்ளி விழுந்து உள்ளது.
இதனால் கார் மீது போடப்பட்டு இருந்த தார்ப்பாய் மற்றும் அருகில் நிறுத்தப்பட்டு இருந்த மொபட் ஆகியவை மட்டும் தீப்பற்றி சேதம் அடைந்து உள்ளது. பெட்ரோல் குண்டு கார் மீது நேரடியாக விழுந்து இருந்தால் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டு இருக்க வாய்ப்பு உள்ளது. பெட்ரோல் குண்டு காரின் அருகே விழுந்ததும் மர்ம ஆசாமிகள் தப்பி ஓடி இருக்கலாம் என்பது தெரிய வந்தது.
ஆனால் இந்து முன்னணி பிரமுகரின் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசிய மர்ம ஆசாமிகள் யார்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசிதேடிவருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், மாவட்ட பொதுச்செயலாளர் ராஜ்குமார் மற்றும் இந்து முன்னணி பிரமுகர்கள் தனபால் வீட்டிற்கு வந்தனர்.
அவர்கள் கூறுகையில், இந்து முன்னணியினர் மீது தொடரும் வன்முறையை தடுக்க வேண்டும். பெட்ரோல் குண்டு வீசியதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்றனர்.
இந்து முன்னணி நிர்வாகி வீடு மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :
Next Story