கடல் சீற்றம் அறிவிப்பு: கடலோர கிராம மக்களுக்கு மீன்துறை எச்சரிக்கை


கடல் சீற்றம் அறிவிப்பு: கடலோர கிராம மக்களுக்கு மீன்துறை எச்சரிக்கை
x
தினத்தந்தி 21 April 2018 4:15 AM IST (Updated: 21 April 2018 2:02 AM IST)
t-max-icont-min-icon

தென் தமிழக கடலோர பகுதிகளில் கடல் சீற்றம் ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து கடலோர கிராம மக்களுக்கு மீன்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

பனைக்குளம்,

கடல் சீற்றத்தின் காரணமாக தென் தமிழகத்தின் கடற்கரை ஒட்டிய பகுதிகளில் குறிப்பாக கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலோரத்தில் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படும் என்று இந்திய கடல்சார் தகவல் மையம் எச்சரித்துள்ளது. எனவே மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம். கடற்கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலோர பகுதிகளான மண்டபம், புதுமடம், வேதாளை, தேவிபட்டினம், உச்சிப்புளி, பனைக்குளம் உள்ளிட்ட கடலோர கிராம பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லக்கூடாது என்று மீன்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும் படகுகள் ஒன்றோடொன்று மோதி சேதமடைவதை தவிர்க்கும் பொருட்டு படகுகளை போதிய இடைவெளியில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்க வேண்டும். கடற்கரை பகுதிகளுக்கு பொதுமக்கள் பொழுதுபோக்கிற்காகவோ, வேடிக்கை பார்க்கவோ செல்ல வேண்டாம் என்றும் கிராமம் கிராமமாக சென்று சம்பந்தபட்ட அதிகாரிகள் அறிவிப்பு செய்தனர். 

Next Story