பரமக்குடியில் மின்மோட்டாரை பயன்படுத்தி குடிநீர் திருட்டு, தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி


பரமக்குடியில் மின்மோட்டாரை பயன்படுத்தி குடிநீர் திருட்டு, தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 21 April 2018 3:30 AM IST (Updated: 21 April 2018 2:02 AM IST)
t-max-icont-min-icon

பரமக்குடியில் மின்மோட்டாரை பயன்படுத்தி குடிநீர் திருடப்படுவதால் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

பரமக்குடி,

பரமக்குடி நகரில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக ஒருநாள் விட்டு ஒருநாள் தண்ணீர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அதுவும் 1 மணி நேரம் மட்டுமே வழங்கப்படுகிறது. தற்போது கோடை காலம் என்பதால் தேவைக்கு குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் வீடுகள் மற்றும் ஓட்டல்கள், வணிக நிறுவனங்களில் குடிநீர் குழாய்களில் மின் மோட்டார்களை பொருத்தி குடிநீரை உறிஞ்சி விடுகின்றனர். இதனால் தெருக்குழாய்களிலும், வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள இணைப்புகளிலும் குடிநீர் வருவதில்லை. வந்தாலும் சிறிதுநேரத்தில் நின்று விடுகிறது.

அதிலும் கடைக்கோடி பகுதிகளுக்கு தண்ணீர் வருவதே கிடையாது. இதனால் அப்பகுதி மக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே கோடை காலங்களில் இதுபோன்ற நிலையை தடுக்க நகராட்சி நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story