ராமேசுவரம் உள்ளிட்ட தென் தமிழகத்தின் கடலோரப்பகுதிகளில் கடல் அலைகள் இன்றும், நாளையும் 11½ அடி வரை எழுந்து ஆர்ப்பரிக்கும்
ராமேசுவரம் உள்ளிட்ட தென் தமிழகத்தின் கடற்கரை ஒட்டிய பகுதிகளில் கடல் அலைகள் இன்றும், நாளையும் 11½ அடி வரை எழுந்து, சீற்றத்துடன் காணப்படும் என்றும், மீனவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மதுரை,
தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது:-
தென் தமிழகத்தின் கடற்கரை ஒட்டிய பகுதிகளில் ஏற்பட்டுள்ள இயற்கை மாற்றத்தால், குறிப்பாக கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் மாவட்ட கடலோரத்தில் உள்ள தாழ்வான பகுதிகளில் 21-ந்தேதி (இன்று) காலை 8.30 மணியில் இருந்து 22-ந்தேதி (நாளை) இரவு 11.30 மணி வரையில் 18 முதல் 22 வினாடிகள் இடைவெளியில் 2.5-3.5 மீட்டர் (அதாவது 8.25 அடி முதல் 11.50 அடி) வரை உயரத்திற்கு கடல் அலைகள் எழுந்து சீற்றத்துடன் காணப்படும் என இந்திய கடல் சார் தகவல் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே, மீனவர்கள் மற்றும் கடலோரப் பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க கேட்டுக்கொண்டு இருக்கிறோம். கடல் சீற்றத்தின் காரணமாக, கடற்கரை பகுதிகள் இதன் தாக்கத்தை பெரிதும் உணரும், எனவே கடற்கரை ஒட்டிய பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம். படகுகள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டு சேதமடைவதை தவிர்க்கும் பொருட்டு படகுகளை போதிய இடைவெளியில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேற்கண்ட நாட்களில் கடற்கரைப் பகுதிகளில், பொதுமக்கள் எவரும் பொழுதுபோக்கு விளையாட்டுகளிலும், வேடிக்கை பார்க்கும் நோக்கிலும் ஈடுபட வேண்டாம் என எச்சரித்து இருக்கிறோம். கடற்கரையில் இருந்து கடலுக்குள் படகுகள் செல்ல வேண்டாம் எனவும், கடலிலிருந்து கடற்கரைக்கு படகுகள் வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது சுனாமிக்கான எச்சரிக்கை இல்லை. அலையின் வேகம் அதிகமாக இருப்பதால் சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களுக்கு தகவல் தெரிவித்து இருக்கிறோம். கடலோர தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள், மீனவர்கள் பாதுகாப்பாக இருக்க இந்த எச்சரிக்கையாக விடுக்கப்பட்டு இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோன்ற எச்சரிக்கையை வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபாலும் விடுத்துள்ளார்.
இதையடுத்து, ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட கலெக்டர் நடராஜன் தலைமையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன் னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் கலெக்டர் நடராஜன் பேசியதாவது:-
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலோர பகுதிகளான ராமேசுவரம் தாலுகா அரிச்சல் முனை, தனுஷ்கோடி, அக்னி தீர்த்தம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கடலில் இறங்கி நீராடுவதை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. மேலும் அரியமான் உள்ளிட்ட கடல் பகுதிகளில் பொதுமக்கள் கடலில் இறங்கி விளையாடுவது மற்றும் நீர்ச்சறுக்கு விளையாட்டுகள் விளையாடுவதை தவிர்க்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் கடல் சீற்றத்தின் தாக்கம் கடற்கரை பகுதிகளில் பெரிதும் உணரப்படும்.
எனவே கடற்கரை ஒட்டிய பகுதிகளில் படகுகள் கடலுக்கு செல்ல வேண்டாம். இந்த இரு நாட்களில் கடற்கரைப் பகுதிகளில், பொதுமக்கள் யாரும் பொழுதுபோக்கு விளையாட்டுகளிலும், வேடிக்கை பார்க்கும் நோக்கிலும் ஈடுபட வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறது. மீட்புக்குழுவினர் தயார்
இதுதவிர மாவட்டத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையினரும், அவசர கால வாகனங்களில் தயார் நிலையில் இருக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. கடலோர பகுதிகளில் உள்ள பல்நோக்கு புயல் காப்பக மையங்களை தயார் நிலையில் வைக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் கடல்சீற்றம் பாதிப்பு மற்றும் மீட்பு உதவி குறித்த தகவல்களை 1077 என்ற கட் டணமில்லா அவசர கால தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.

Related Tags :
Next Story