காஞ்சீபுரம் அருகே மணல் கடத்தல்; 5 பேர் கைது


காஞ்சீபுரம் அருகே மணல் கடத்தல்; 5 பேர் கைது
x
தினத்தந்தி 21 April 2018 3:00 AM IST (Updated: 21 April 2018 2:16 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் அருகே மணல் கடத்தல் தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் அடுத்த ஒலிமுகமது பேட்டை பகுதியில் பெரிய காஞ்சீபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முரளி வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு டிப்பர் லாரியை மடக்கி பிடித்து சோதனை செய்தார். சோதனையில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. அதையொட்டி காஞ்சீபுரம் அடுத்த திருமால்பூரை சேர்ந்த கண்ணன் (வயது 24) என்பவரை கைது செய்து லாரியை பறிமுதல் செய்தார்.

அதேபோல் காஞ்சீபுரம் அடுத்த கோளிவாக்கம் பாலாறு பகுதியில் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தப்படுவதாக காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வனுக்கு புகார்கள் வந்தது. அவரது உத்தரவின்பேரில் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் போலீசாருடன் அந்த பகுதிக்கு விரைந்தார். அப்போது அங்கு மாட்டு வண்டிகளில் மணல் கடத்தியது தெரியவந்தது.

அதையொட்டி கோளிவாக்கம் பகுதியை சேர்ந்த சந்தோஷ் (30), குமார் (24), ஆனந்தன் (30), சின்ன அய்யங்குளம் பகுதியை சேர்ந்த முத்தன் (56) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். 

Next Story