காஷ்மீர் மாநிலத்தில் சிறுமி கற்பழித்து கொலை: வடகரை, சங்கரன்கோவிலில் கண்டன ஆர்ப்பாட்டம்


காஷ்மீர் மாநிலத்தில் சிறுமி கற்பழித்து கொலை: வடகரை, சங்கரன்கோவிலில் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 April 2018 2:30 AM IST (Updated: 21 April 2018 9:42 PM IST)
t-max-icont-min-icon

காஷ்மீர் மாநிலத்தில் சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்டதை கண்டித்து வடகரை, சங்கரன்கோவிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

தென்காசி, 

காஷ்மீர் மாநிலத்தில் சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்டதை கண்டித்து வடகரை, சங்கரன்கோவிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

கண்டன ஆர்ப்பாட்டம் 

காஷ்மீர் மாநிலத்தில் 8 வயது சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்டதை கண்டித்து தென்காசி அருகே உள்ள வடகரையில் இஸ்லாமிய இளைஞர் பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இமாம் சாகுல் அமீது தலைமை தாங்கினார். இப்ராகிம் பைஜி, யூசுப் உலவி, அப்துல் காதர் ரியாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பெண் குழந்தைகள் பர்தா அணிந்து கைகளில் கண்டன வாசகங்கள் எழுதிய பதாகைகளை வைத்துக் கொண்டு கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசை கண்டித்து கண்டன கோ‌ஷங்கள் எழுப்பினார்கள்.

சங்கரன்கோவில் 

இதே கோரிக்கையை வலியுறுத்தி சங்கரன்கோவில் வட்டார மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தேரடி திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டார செயலாளர் அசோக்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட விவசாய அணி செயலாளர் பாலுச்சாமி, வட்டாரக்குழு உறுப்பினர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துப்பாண்டியன், வட்டார குழு உறுப்பினர்கள் மாடசாமி, லட்சுமி, முருகன் உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பாக்கியச்சாமி, ஜெயராஜ், சுல்தான், இஸ்மாயில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story