மாடு விடும் விழாவில் 220 காளைகள் சீறிப்பாய்ந்தன


மாடு விடும் விழாவில் 220 காளைகள் சீறிப்பாய்ந்தன
x
தினத்தந்தி 22 April 2018 3:45 AM IST (Updated: 22 April 2018 12:26 AM IST)
t-max-icont-min-icon

ஆரணியை அடுத்த இரும்பேடு ஊராட்சியில் மாடு விடும் விழா நடைப்பெற்றது.

ஆரணி,

ஆரணியை அடுத்த இரும்பேடு ஊராட்சிக்குட்பட்ட மருதேரி கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கூழ்வார்த்தலையொட்டி முதலாவது ஆண்டாக நேற்று காளை விடும் விழா நடைபெற்றது. இதில் ஆரணி, வடுகசாத்து, கீழ்நகர், கீழ்அரசம்பட்டு, குடியாத்தம், கம்மவான்பேட்டை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட ஊர்களில் இருந்து 220 காளைகள் பங்கேற்றன. இதனை தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டதும் அவை சீறிப்பாய்ந்து இலக்கை நோக்கி வேகமாக ஓடின. அந்த காளைகளை தொட முயன்று இளைஞர்கள் காளையை நெருங்கினர். ஆனால் காளைகள் அவர்களிடம் சிக்காமல் பாய்ந்து சென்றன. இதில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. காளைகள் இலக்கை நோக்கி ஓடியதை டிஜிட்டல் கடிகாரம் மூலம் தேர்வு செய்து பரிசுகள் வழங்கப்பட்டன. முதல் பரிசாக மோட்டார்சைக்கிளும், 2-வது பரிசாக 1½ பவுன் தங்க நகையும், 3-வது பரிசாக 1 பவுன் தங்க காசும், 4-ம் பரிசாக எல்.சி.டி. டி.வி.யும், 5-ம் பரிசாக பிரிட்ஜ் மற்றும் இவை உள்பட 60 பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டிக்கான ஏற்பாடுகளை கே.வேலு, எம்.ஏழுமலை, டி.ரவிச்சந்திரன், சி.முரளி, கே.பச்சியப்பன் மற்றும் இளைஞர்கள், விழாக்குழுவினர்கள் செய்திருந்தனர்.

Next Story