காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி சிவகங்கையில் மனித சங்கிலி போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி சிவகங்கையில் நாளை மனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட உள்ளது என்று தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காரைக்குடி,
சிவகங்கை மாவட்ட தி.மு.க. ஆலோசனை கூட்டம் காரைக்குடி செஞ்சையில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் பெரியகருப்பன் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் தென்னவன், அவைத்தலைவர் வைத்தியநாதன் ஆகியோர் தலைமை தாங்கினர். கூட்டத்தில் மாவட்ட துணைச்செயலாளர்கள் சேங்கைமாறன், மணிமுத்து, மாவட்ட இளைஞரணி முன்னாள் துணை அமைப்பாளர் பள்ளத்தூர் ரவி, வக்கீல் பாலசுப்பிரமணியன், சாக்கோட்டை முன்னாள் யூனியன் தலைவர் சுப.முத்துராமலிங்கம், கரு.அசோகன், நகர செயலாளர்கள் குணசேகரன், பாலா, மகளிரணி ஆதி.கண்ணாத்தாள், பவானிகணேசன், ஹேமலதாசெந்தில் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பின்னர் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மறைந்த முன்னாள் அமைச்சர் எஸ்.மாதவன் உருவப்படத்தை திறப்பதற்காக இன்று(ஞாயிற்றுக்கிழமை) சிங்கம்புணரிக்கு வருகை தரும் செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிப்பது, காவிரி மேலாண்மை அமைக்கக்கோரி சிவகங்கையில் நாளை(திங்கட்கிழமை) நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்தில் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்துகொள்வது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தி.மு.க. சார்பில் மாவட்டம் முழுவதும் இருந்து அஞ்சல் அட்டையை ஜனாதிபதிக்கு அனுப்புவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Tags :
Next Story