திருப்பூரில் பெட்ரோல் அளவு குறைவாக இருப்பதாக வாக்குவாதம் செய்த கடைக்காரர், பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு
பெட்ரோல் அளவு குறைவாக இருப்பதாக கூறி பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியரிடம், கடைக்காரர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர்,
திருப்பூர் காலேஜ் ரோடு பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 38). இவர் லட்சுமிநகரில் பனியன் தயாரிக்க தேவையான மூலப்பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு மோட்டார்சைக்கிளில் திருப்பூர் மில்லர் ஸ்டாப் வழியாக வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் தீர்ந்துவிட்டது.
இதனால் அந்த பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு அவர் சென்றார். பின்னர் அங்கு 100 ரூபாய்க்கு பெட்ரோல் போடும் படி ஊழியரிடம், முத்துக்குமார் கூறியுள் ளார். உடனே அந்த ஊழியர் முதலில் ரூ.70-க்கும், பின்னர் ரூ.30-க்கும் என 2 முறையாக பெட்ரோல் போட்டுள்ளார். 100 ரூபாய்க்கு 2 முறை பெட்ரோல் போட்டதால் அதிர்ச்சியடைந்த முத்துக்குமார் இது குறித்து ஊழியரிடம் கேட்டுள்ளார். அப்போது அந்த ஊழியர் முறையான பதில் அளிக்கவில்லை.
இதனால் சந்தேகமடைந்த முத்துக்குமார் உடனே மோட்டார்சைக்கிளில் இருந்து பெட்ரோலை எடுத்து ஒரு பாட்டிலில் அளந்து பார்த்துள் ளார். அப்போது 100 ரூபாய்க்கு மதிப்பிலான பெட்ரோல் அதில் இல்லை. அளவு குறைவாக இருந்ததாக தெரிகிறது. இதனால் இது குறித்து அவர் ஊழியரிடம் கேட்டு வாக்குவாதம் செய்துகொண்டிருந்தார். இதன் காரணமாக பெட்ரோல் விற்பனை நிலையம் முன்பு ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.
இது குறித்து திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். பெட்ரோல் அளவு குறைவாக இருப்பதாக கூறி ஊழியருடன், கடைக்காரர் வாக்குவாதம் செய்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story