சிறுமலைக்கு மதுபானம் கடத்த முயன்ற 2 பேர் கைது


சிறுமலைக்கு மதுபானம் கடத்த முயன்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 23 April 2018 3:45 AM IST (Updated: 22 April 2018 1:49 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் இருந்து சிறுமலைக்கு மதுபானம் கடத்த முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து ஜீப் மற்றும் 400 மதுபாட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

திண்டுக்கல், 

திண்டுக்கல்லில் இருந்து சிறுமலைக்கு மதுபானம் கடத்தி செல்வதாக தாலுகா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று காலை தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் தலைமையில் முரளி உள்ளிட்ட போலீசார் சிறுமலை செல்லும் சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அந்த வழியாக வந்த ஒரு ஜீப்பை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த ஜீப்பில் 400 மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே ஜீப்பில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், அவர்கள் சிறுமலை தாழக்கடையை சேர்ந்த பாண்டியன் மகன் மணிகண்டன் (வயது 35), ராமசாமி மகன் முருகன் (31) என்பது தெரியவந்தது. மேலும், திண்டுக்கல்லில் இருந்து சிறுமலைக்கு மதுபாட்டில்களை கடத்தி செல்வதை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஜீப் மற்றும் 400 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story