ரே‌ஷன்கடைகளில் அதிகஅளவில் பச்சரிசி வினியோகம் செய்வதை நிறுத்த வேண்டும் கலெக்டரிடம் கிராம பெண்கள் மனு


ரே‌ஷன்கடைகளில் அதிகஅளவில் பச்சரிசி வினியோகம் செய்வதை நிறுத்த வேண்டும் கலெக்டரிடம் கிராம பெண்கள் மனு
x
தினத்தந்தி 22 April 2018 3:15 AM IST (Updated: 22 April 2018 1:58 AM IST)
t-max-icont-min-icon

ரே‌ஷன் கடைகளில் அதிகஅளவில் பச்சரிசி வினியோகம் செய்வதை நிறுத்த வேண்டும் என்று கலெக்டரிடம் கிராம பெண்கள் மனுகொடுத்துள்ளனர்.

முதுகுளத்தூர்,

கடலாடி யூனியன் கீழச்சிறுபோது கிராமத்தில் ரே‌ஷன்கடையில் 60 சதவீதம் புழுங்கல் அரிசியும், 40 சதவீதம் பச்சரிசியும் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ரே‌ஷன்கடையில் புழுங்கல் அரிசி மட்டுமே வினியோகம் செய்ய வேண்டும். பச்சரிசி அதிக அளவில் வழங்குவதை நிறுத்த வேண்டும் என கலெக்டரிடம் கிராம பெண்கள் மனு கொடுத்துள்ளனர்.

அதனை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் நடராஜன், தமிழகம் முழுவதும் இதே நிலை உள்ளதாகவும், விரைவில் பச்சரிசி நிறுத்தப்பட்டு, புழுங்கல் அரிசி மட்டும் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தார்.

Related Tags :
Next Story