வன்கொடுமை சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி மாநில எல்லையில் முழு அடைப்பு போராட்டம்
வன்கொடுமை சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஓசூர் அருகே மாநில எல்லையில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இதனால் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
ஓசூர்,
வன்கொடுமை சட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றம் சமீபத்தில் பிறப்பித்த உத்தரவு காரணமாக வட மாநிலங்களில் கலவரம் ஏற்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், காஷ்மீரில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், அந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வலியுறுத்தியும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பல்வேறு தலித் அமைப்புகள் சார்பில் ஓசூர் அருகே உள்ள கர்நாடக மாநில எல்லைகளான அத்திப்பள்ளி, ஆனேக்கல், சர்ஜாபுரம், பொம்மசந்திரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத்தினார்கள். இதையொட்டி அந்த பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப் பட்டிருந்தன.
ஓசூரில் இருந்து அந்த பகுதிகளுக்கு நேற்று பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டன. இதன் காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக ஓசூர், பூனப்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பலரும் கர்நாடகாவிற்கு செல்ல முடியாமல் அவதிக்குள்ளானார்கள்.
இந்த நிலையில் ஓசூர் அருகே ஜூஜூவாடி பக்கமுள்ள அத்திப்பள்ளி நினைவு எல்லை அருகில் பல்வேறு அமைப்புகள் சார்பில் பெங்களூரு - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதைத் தொடர்ந்து அவர்களை கர்நாடகா போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இதன் காரணமாக மாநில எல்லையில் பரபரப்பாக காணப்பட்டது.

Related Tags :
Next Story