சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளை எரிக்கக்கூடாது தீயணைப்பு துறையினர் அறிவுறுத்தல்
கரூரில் சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளை எரிக்கக் கூடாது என தீயணைப்பு துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
கரூர்,
கரூரில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. கரூரில் நேற்றைய வெயிலின் அளவு 105 டிகிரியாக இருந்தது. இந்த நிலையில் சுட்டெரிக்கும் வெயிலால் புதர் பகுதிகளில் திடீரென தீப்பிடிக்க தொடங்கி எளிதில் பரவு கிறது. இதுபோன்ற தீ விபத்து சம்பவங்களில் தீயை அணைக்க கரூர் தீயணைப்பு நிலையத்திற்கு தொலைபேசி அழைப்புகள் அதிகமாக வருகிறது. மேலும் சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளை பொதுமக்கள் லேசாக எரித்து விட்டு செல்வதால் அந்த தீ மேலும் பல இடங்களுக்கு பரவுகிறது. இதுபோன்ற தொலைபேசி அழைப்புகளும் கரூர் தீயணைப்பு நிலையத்திற்கு ஏராளமாக வருகிறது. தீயணைப்பு வீரர்களும் விரைந்து சென்று தீயை அணைத்து வருகின்றனர்.
அறிவுறுத்தல்
இந்த நிலையில் சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளை பொதுமக்கள் எரிக்கக் கூடாது என தீயணைப்பு துறையினர் அறிவுறுத்தி யுள்ளனர். இது குறித்து தீயணைப்பு துறையினர் கூறுகையில், “கடந்த ஒரு மாதத்தில் புற்கள், குப்பைகள் தீப்பிடித்து எரிவதாக 60-க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் வந்துவிட்டன. கோடை காலத்தில் வெப்பம் இன்னும் அதிகமாக இருக்கும் காலங் களில் காய்ந்த புற்கள், செடிகள் உள்ள பகுதிகளில் தீப்பிடித்து எரிவது வழக்கம். இதற்கு முன்னெச்சரிக்கையாக தங்களது பகுதிகளில் காய்ந்த புற்கள், செடிகள் இருந்தால் அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது இடங்களில் இருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து காய்ந்த புற்களை அகற்ற ஏற்பாடு செய்ய வேண்டும். சாலையோரம் குப்பைகள் அதிகமாக கொட்டப்பட்டு கிடந்தால் அவற்றை எரிக்காமல் நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்து அள்ளி செல்ல அறிவுறுத்த வேண்டும். குப்பையில் தீ வைத்து எரிக்கும் போது அதில் இருந்து வெளியேறும் புகை, நெருப்பு தனல்கள் மற்ற இடத்திற்கு பரவும் போது வெயிலின் தாக்கத்தால் பெரும் தீ விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்கள் விழிப்புணர்வுடனும், முன்னெச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும்” என்றனர்.

Related Tags :
Next Story