தஞ்சையில், டிரைவிங் பயிற்சி பெற்றபோது லாரி மீது கார் மோதல்; 2 பேர் பலி
தஞ்சையில், டிரைவிங் பயிற்சி பெற்றபோது லாரி மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
தஞ்சாவூர்,
திருவாரூர் மாவட்டம் கண்கொடுத்தவணிதம் கிராமத்தில் வசித்து வந்தவர் தேவா (வயது 45). இவரும், திருவாரூர் விடையாள் புரத்தை சேர்ந்த சரவணனும் (40) தஞ்சை பாத்திமா நகரில் வசித்து வரும் தங்களது நண்பர் பரமேஸ்வரன் வீட்டிற்கு வந்தனர். தேவாவுக்கும், சரவணனுக்கும் கார் டிரைவிங் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. பரமேஸ்வரன் சொந்தமாக கார் வைத்து இருந்ததால் அதன்மூலம் கார் ஓட்ட கற்று கொடுக்கும்படி இருவரும் பரமேஸ்வரனிடம் வலியுறுத்தினர்.
நண்பர்களின் ஆசையை நிறைவேற்றி வைக்க முடிவு செய்த பரமேஸ்வரன், நேற்று முன்தினம் இரவு தனது காரை எடுத்துக்கொண்டு அதில் தனது நண்பர்களையும் ஏற்றிக்கொண்டு டிரைவிங் கற்றுக்கொடுப்பதற்காக கும்ப கோணம் புறவழிச்சாலைக்கு வந்தார்.
டிரைவர் இருக்கையில் தேவாவை அமர சொல்லி விட்டு அருகில் சரவணனும், பரமேஸ்வரனும் இருந்து கொண்டனர். தேவா காரை மெதுவாக ஓட்டிச் சென்றார். தஞ்சை புறவழிச்சாலையில் உள்ள ஆதிமாரியம்மன் கோவில் அருகே கார் சென்றபோது ரெயில்வே கேட் போடப்பட்டு இருந்தது. இதனால் இருபுறமும் வாகனங்கள் வரிசையாக நின்றன. ரெயில் சென்றவுடன் கேட் திறந்து விடப்பட்டது.
உடனே இருபுறமும் வரிசையாக நின்ற வாகனங்கள் ரெயில்வே கேட்டை கடந்து சென்று கொண்டிருந்தன. அதேபோல கும்பகோணத்தில் இருந்து மதுரையை நோக்கி சென்ற ஒரு லாரியும் ரெயில்வே கேட்டை கடந்து வந்து கொண்டிருந்தது.
அப்போது தேவா ஓட்டிச் சென்ற கார், அவரது கட்டுப்பாட்டை இழந்து எதிரில் வந்த லாரி மீது மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. இந்த விபத்தில் தேவா சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.
விபத்தை பார்த்ததும் அந்த வழியாக சென்றவர்கள் விரைந்து வந்து காருக்குள் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சரவணனையும், பரமேஸ்வரனையும் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி சரவணன் பரிதாபமாக இறந்தார்.
விபத்து பற்றி தகவல் அறிந்த தஞ்சை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் விபத்தில் பலியான தேவாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து தஞ்சை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story