கோட்டைக்காடு, மூத்தனாக்குறிச்சியில் ஜல்லிக்கட்டு 1,130 காளைகள் சீறிப்பாய்ந்தன
கோட்டைக்காடு, மூத்தனாக்குறிச்சியில் நடந்த ஜல்லிக்கட்டில் 1,130 காளைகள் சீறிப்பாய்ந்தன.
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள கோட்டைக்காட்டில் புனித சூசையப்பர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் நடந்த திருவிழாவையொட்டி நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. ஜல்லிக்கட்டை அமைச்சர் விஜயபாஸ்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட 645 காளைகள் வாடிவாசல் வழியாக ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. இதையடுத்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி, போட்டு அடக்கினர். சில காளைகள் மாடுபிடி வீரர்களின் கையில் சிக்காமல் சென்றன.
இதில் காளைகள் முட்டியதில் 10 பேர் காயமடைந்தனர். இதையடுத்து அங்கிருந்த கால்நடை மருத்துவக்குழுவினர் காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கி வீரர்களும், பிடி படாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ், மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கண்டுகளித்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.
திருவரங்குளம் அருகே அழகம்பாள் புரத்தை சேர்ந்த மூத்தனாக்குறிச்சியில் பிரசித்தி பெற்ற அழகம்பாள் கோவில் உள்ளது. இக்கோவில் சித்திரை திருவிழாவையொட்டி மூத்தனாக்குறிச்சியில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. ஜல்லிக்கட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 485 காளைகளும் வாடிவாசல் வழியாக ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினர். சில காளைகள் மாடுபிடி வீரர்கள் கையில் சிக்கின. சில காளைகள் மாடுபிடி வீரர்களால் அடக்க முடியவில்லை. அவர்களை தூக்கி வீசி பந்தாடியது.
இதில் காளைகள் முட்டியதில் 9 வீரர்கள் காயமடைந்தனர். இதையடுத்து காயமடைந்தவர்களுக்கு மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர். ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பீரோ, கட்டில், சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டை மாவட்ட உதவி கலெக்டர் கே.எம்.சரயு, வருவாய்த்துறை அதிகாரிகள், பொதுமக்கள், இளைஞர்கள் கண்டுகளித்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை திருவரங்குளம் போலீசார் செய்திருந்தனர்.

Related Tags :
Next Story