தொடரும் குற்ற சம்பவங்கள்: போலீஸ் அதிகாரிகளுடன் நாராயணசாமி ஆலோசனை
புதுவையில் அதிகரித்து வரும் குற்ற செயல்களை தொடர்ந்து போலீஸ் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார்.
புதுச்சேரி,
புதுவையில் சமீப காலமாக விரும்பத்தகாத சில நிகழ்வுகள் நடந்து வருகின்றன. குறிப்பாக திடீர் போராட்டங்கள், வழிப்பறி, திருட்டு சம்பவங்கள் ஆகியவை அதிகரித்துள்ளன.
மேலும் சட்டம்-ஒழுங்கு, குற்ற புலனாய்வு போலீசார் இடையே சரியான இணக்கம் இல்லாத நிலையும் காணப்படுகிறது. இதுதொடர்பாக முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு புகார்கள் சென்றன.
இதைத்தொடர்ந்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூட்டத்தை முதல்-அமைச்சர் நாராயணசாமி காபினெட் அறையில் நேற்று கூட்டினார். இந்த கூட்டத்தில் டி.ஐ.ஜி. சந்திரன், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தா, போலீஸ் சூப்பிரண்டு வெங்கடசாமி மற்றும் சிறப்பு பிரிவு போலீஸ் அதிகாரிகள் கலந்துகொண்டார்.
கூட்டத்தில், போலீஸ் அதிகாரிகளின் செயல்பாடுகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. சட்டம்- ஒழுங்கு மற்றும் குற்ற புலனாய்வு போலீசார் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் முதல்-அமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தினார். எந்த பிரச்சினையாக இருந்தாலும் உடனடியாக அரசின் கவனத்துக்கு கொண்டுவர வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

Related Tags :
Next Story