நடைபயிற்சியின் போது குப்பைகளை சேகரிக்கும் புதிய திட்டம் திருச்சியில் தொடக்கம்


நடைபயிற்சியின் போது குப்பைகளை சேகரிக்கும் புதிய திட்டம் திருச்சியில் தொடக்கம்
x
தினத்தந்தி 23 April 2018 4:30 AM IST (Updated: 23 April 2018 2:27 AM IST)
t-max-icont-min-icon

நடைபயிற்சியின் போது குப்பைகளை சேகரிக்கும் புதிய திட்டம் திருச்சியில் நேற்று தொடங்கப்பட்டது.

திருச்சி,

உலக பூமி தினத்தை முன்னிட்டு நேற்று திருச்சி மாநகராட்சி சார்பில் திருச்சி “பிளாக்கிங்” என்கிற திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் நோக்கமானது பொதுமக்கள் நடைபயிற்சியின் போது தாங்கள் கடந்து செல்லும் வழியில் காணப்படும் குப்பைகளை சேகரித்து குப்பையில்லா மாநகரமாக உருவாக்குவதே ஆகும். இந்த திட்டத்தை நேற்று ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை அருகே உள்ள உள்ள காவிரி ஆற்றங்கரையில் திருச்சி மாவட்ட கலெக்டர் ராஜாமணி, மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.பின்னர் காவிரி கரையில் உள்ள குப்பைகளை அகற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நேற்று அந்தந்த வார்டு பகுதிகளில் நடைபயிற்சியின் போது சாலைகளில் உள்ள குப்பைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இப்பணியை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, குமார் எம்.பி. ஆகியோர் பார்வையிட்டு குப்பைகளை அகற்றினார்கள். இந்த நிகழ்ச்சியில் மாநகர போலீஸ் துணை கமிஷனர் சக்திகணேஷ், திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், டைரி சகா, மாவட்ட விளையாட்டு நல அலுவலர் புண்ணியமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.

இந்த திட்டம் குறித்து மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் கூறுகையில்,“பொதுமக்கள் நடைபயிற்சியின் போது தாங்கள் கடந்து செல்லும் வழியில் உள்ள பிளாஸ்டிக், குப்பைகளை எடுத்து பையில் சேகரித்து குப்பைத்தொட்டி அல்லது குப்பைகள் வாங்க வீடுதேடிவரும் வாகனத்தில் வழங்கவேண்டும். இந்த திட்டம் ஒரு தொடர் நிகழ்வாகவும், பொதுமக்களின் இயக்கமாகவும் உருவாக வேண்டும். இத்திட்டத்தில் நகர் நல சங்கங்கள், தொண்டு நிறுவனங்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் அனைவரும் இணைந்து அவர்களுக்கு உரிய அந்தந்த பொதுமக்களுடன் இணைந்து பகுதிகளை தூய்மைபடுத்தும் பணியில் ஈடுபட்டால் இத்திட்டத்தின் மூலம் தூய்மையான மாநகரத்தை உருவாக்க முடியும். மேலும், திருச்சி பிளாக்கிங் திட்டத்தில் இணைய பேஸ்புக்கில் (முகநூலில்) TR-I-C-HY PL-O-G-G-I-NG என்ற குழுவை ஆரம்பித்துள்ளோம். இதில் இதுவரைஆயிரம் பேர் பதிவுசெய்து கலந்து கொண்டார்கள்”என்றார். 

Next Story