ஜூகு கடற்கரையில் தண்ணீர் விளையாட்டுகள் அறிமுகம்
மும்பை ஜூகு கடற்கரையில் தண்ணீர் விளையாட்டுகள் அறிமுகம் செய்யப்பட் டுள்ளதால் பொது மக்கள் உற்சாகம் அடைந் துள்ளனர்.
மும்பை,
மும்பையில் உள்ள பொழுது போக்கு இடங்களில் ஜூகு கடற்கரை முக்கியமானது ஆகும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் வருகின்றனர். விடுமுறை நாட்களில் இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும். எனினும் ஜூகு கடற்கரையில் காற்று வாங்குவதை தவிர மிகப்பெரிய பொழுது போக்கு அம்சங்கள் என எதுவும் இல்லை. இந்தநிலையில் மாநில கடல் வாரியம் ஜூகு கடற்கரையில் தண்ணீர் விளையாட்டுகளை அறிமுகம் செய்து உள்ளது. ஜெட் ஸ்கி, சோபா ரைடு, பனானா ரைடு, பிளையிங் பிஷ் போன்ற விளையாட்டுகள் உள்ளன.
வெயில் கொளுத்தும் கோடை நேரத்தில் ஜூகு கடற்கரையில் தண்ணீர் விளையாட்டுகள் தொடங்கி இருப்பது பொதுமக்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பொது மக்கள் ரூ.150 முதல் 200 வரை கட்டணமாக செலுத்தி இந்த விளையாட் டுகளை அனுபவிக்கலாம். இதுகுறித்து மாநில கடல்வாரிய அதிகாரி ஒருவர் கூறும்போது, “ பெரும்பாலான மக்கள் தண்ணீர் விளையாட்டுகளை விரும்புவார்கள். கோடை காலம் என்பதால் தற்போது இதை தொடங்கி உள்ளோம். மே 25-ந் தேதி வரை இது தொடரும். மழை காலத்திற்கு பிறகு மீண்டும் செப்டம்பர் 1-ந் தேதி தண்ணீர் விளையாட்டு செயல்படுத்தப்படும்” என்றார்.

Related Tags :
Next Story