தூத்துக்குடியில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி
தூத்துக்குடியில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி வருகிற 26-ந்தேதி தொடங்குகிறது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட கூடைப்பந்து கழக தலைவர் வி.வி.டி.பிரம்மானந்தம் நேற்று காலை தூத்துக்குடியில் உள்ள இந்திய வர்த்தக தொழிற்சங்க கூட்ட அரங்கில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தூத்துக்குடி மாவட்ட கூடைப்பந்து கழகம் மற்றும் தமிழ்நாடு கூடைப்பந்து கழகம் ஆகியவை இணைந்து நடத்தும் 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி வருகிற 26-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை நடக்கிறது. போட்டிகள் தருவை கூடைப்பந்து மைதானம், விகாசா பள்ளி, லசால் பள்ளி, கிரசண்ட் பள்ளி மைதானங்கள் ஆகிய 4 இடங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் நடக்கிறது.
போட்டி தொடக்க விழா வருகிற 26-ந்தேதி மாலை 6 மணிக்கு தருவை மைதானத்தில் நடக்கிறது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் தலைமை தாங்கி, போட்டியை தொடங்கி வைக்கிறார். போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் பரிசு வழங்கி பாராட்டுகிறார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு கூடைப்பந்து கழக மாநில தலைவர் ராஜ்சத்யன், பொதுச்செயலாளர் ஆதவ்அர்ஜூனா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
பேட்டியின்போது, மாவட்ட கூடைப்பந்து கழக செயலாளர் சுஜேஷ்ராஜா, பொருளாளர் நார்ட்டன், துணை செயலாளர்கள் பாலமுருகன், பாலகிருஷ்ணன், முரளி ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story