வேட்பு மனுக்களை பரிசீலனை செய்ய அதிகாரிகள் வராததால் கூட்டுறவு சங்கத்தில் தி.மு.க. உள்ளிட்ட கட்சியினர் காத்திருக்கும் போராட்டம்
வேட்பு மனுக்களை பரிசீலனை செய்ய அதிகாரிகள் யாரும் வராததால் செங்குறிச்சி கூட்டுறவு சங்கத்தில் தி.மு.க. உள்ளிட்ட கட்சியினர் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்குறிச்சி வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் இயக்குனர்களுக்கான தேர்தல் நடத்துவதற்கு வேட்பு மனுக்கள் பெறப்பட்டு இருந்தது. இதன் மீதான பரீசிலனை இன்று(அதாவது நேற்று) நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து பரிசீலனை நிலவரம் குறித்து அறிந்துகொள்ள தி.மு.க., பா.ம.க., அம்மா திராவிட முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த மனு தாரர்கள் காலையிலேயே கூட்டுறவு கடன் சங்கத்திற்கு வந்திருந்தனர். ஆனால் நீண்ட நேரமாகியும் அதிகாரிகள் யாரும் அங்க வரவில்லை. இதையடுத்து தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் அலுவலகத்திற்கு உள்ளே அமர்ந்து காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாலை 5 மணி வரையில் அதிகாரிகள் யாரும் அங்கு வரவில்லை. இருப்பினும், அதிகாரிகள் இங்கு வரும் வரையில் நாங்கள் கலைந்து போவதில்லை என்று கூறி மாலையிலும் போராட்டத்தை தொடர்ந்தனர். இதையடுத்து உளுந்தூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலமுரளி, மாணிக்கம் தலைமையிலான போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானம் செய்தனர். தொடர்ந்து அவர்கள் மாலை 6 மணிக்கு போராட்டத்தை கைவிடுவதாக கூறிவிட்டு, அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர். நேற்று மாலை வரைக்கும் வேட்பு மனுக்களை பரிசீலனை செய்வதற்கு அதிகாரிகள் யாரும் அங்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Tags :
Next Story