காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தக்கலையில் மனித சங்கிலி போராட்டம்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தக்கலையில் மனித சங்கிலி போராட்டம்
x
தினத்தந்தி 24 April 2018 4:30 AM IST (Updated: 24 April 2018 2:05 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நாகர்கோவில், தக்கலையில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.

நாகர்கோவில்,

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனே அமைக்க கோரி, தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் 23-ந்தேதி (நேற்று) மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் என தி.மு.க. அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம் முழுவதும் நேற்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், தக்கலை ஆகிய இடங்களில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.

நாகர்கோவிலில் நடந்த மனித சங்கிலி போராட்டத்துக்கு, குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ஆஸ்டின், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், நாகர்கோவில் நகர தி.மு.க. செயலாளர் மகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடசேரி அண்ணா சிலை முன்பு இருந்து கேப் ரோடு அண்ணா பஸ்நிலையம் வரையில் நடந்த மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கைகளை கோர்த்தபடி அணிவகுத்து நின்றனர். மாலை 4 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டம் 5 மணி வரை நடைபெற்றது.

இதில், தி.மு.க.சார்பில் முன்னாள் எம்.பி. ஹெலன்டேவிட்சன், பொருளாளர் கேட்சன், ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், தாமரைபாரதி, குட்டிராஜன், பொதுக்குழு உறுப்பினர் ஷேக்தாவூது, பெஞ்சமின், குழித்துறை நகர தி.மு.க.செயலாளர் பொன் ஆசைதம்பி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மகேஷ் லாசர், சிவகுமார், அனிதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் முன்னாள் எம்.பி. பெல்லார்மின், மாவட்டக்குழு உறுப்பினர் அந்தோணி, இந்திய கம்யூனிஸ்டு சார்பில் மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் வெற்றிவேல், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணைபொது செயலாளர் வன்னியரசு, குமரி மாவட்ட செயலாளர் திருமாவேந்தன், த.மு.மு.க.சார்பில் திருவை செய்யது, திராவிடர் கழகம் சார்பில் வெற்றிவேந்தன் உள்பட அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.

தக்கலையில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்திற்கு தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் பப்பு தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தக்கலை வட்டார குழு தலைவர் சுஜா ஜாஸ்மின், விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் ஜெயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் ஜாண் கிறிஸ்டோபர், மாநில சட்டகுழு துணை செயலாளர் வக்கீல் தினேஷ், காங்கிரஸ் நகர தலைவர் ஹனுகுமார், ஜாண் இக்னேசியஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாதவன் மற்றும் தி.மு.க. தோழமை கட்சி நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். கல்குளம் தாலுகா அலுவலகத்தில் இருந்து கோட்டாட்சியர் அலுவலகம் வரை அவர்கள் மனித சங்கிலியாக கைகோர்த்து நின்றபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Next Story