காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தி.மு.க. சார்பில் மனித சங்கிலி போராட்டம்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தி.மு.க. சார்பில் மனித சங்கிலி போராட்டம்
x
தினத்தந்தி 24 April 2018 4:15 AM IST (Updated: 24 April 2018 2:06 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கோவையில் தி.மு.க. சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு கைகோர்த்து நின்றனர்.

கோவை,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், இதற்கு முயற்சி மேற்கொள்ளாத மத்திய-மாநில அரசுகளை கண்டித்தும் தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் அறிவித்து இருந்தன.

அதன்படி கோவை காந்திபுரம் பகுதியில் நேற்று மாலை 4 மணிக்கு மனித சங்கிலி போராட்டம் நடந்தது. கோவை நஞ்சப்பா சாலையில் தொடங்கிய மனித சங்கிலி லாலா கார்னர், கிராஸ்கட் சாலை, 100 அடி சாலை, வடகோவை மேம்பாலம், டாடாபாத் வரை சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் தொடர்ந்தது.

இதில் தி.மு.க. மாநகர பொறுப்பாளர்கள் கார்த்திக் எம்.எல்.ஏ. (மாநகரம் தெற்கு), முத்துசாமி (மாநகரம் வடக்கு), தமிழ்மணி (புறநகர் தெற்கு), சி.ஆர்.ராமச்சந்திரன் (புறநகர் வடக்கு) மற்றும் டி.ஆர்.சண்முகசுந்தரம், வடவள்ளி துரை, ஆறுமுகபாண்டி, அன்னூர் நடராஜ், இ.ஆனந்தன், வெற்றிலை கருப்பசாமி, திராவிட மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

தி.மு.க. முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, பொருளாளர் நாச்சிமுத்து, இளைஞர் அணி மாநில துணை செயலாளர் பைந்தமிழ்பாரி, கார்த்திக் செல்வராஜ், நா.முருகவேல் மற்றும் பலர் ஏர் கலப்பையுடன் வந்து மனித சங்கிலியில் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் மயூரா ஜெயக்குமார் (மாநகரம்), வி.எம்.சி.மனோகரன் (வடக்கு), சக்திவேல் (தெற்கு), பி.எஸ்.சரவணக்குமார், எம்.என்.கந்தசாமி, வீனஸ்மணி, கோவை செல்வன், கே.எஸ்.மகேஷ்குமார், சவுந்தரகுமார், காந்தகுமார், முத்தையா, முன்னாள் மேயர் ஆர்.வெங்கடாசலம், காயத்ரி, ஹேமா ஜெயசீலன், நவீன்குமார், சின்ராஜ், விஜயகுமார்.

ம.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார், புறநகர் மாவட்ட செயலாளர் குகன்மில் செந்தில், வே.ஈசுவரன், ஆடிட்டர் அர்ஜூன்ராஜ், லூயிஸ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி முன்னாள் எம்.எல்.ஏ., ஆறுமுகம், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி விவசாய அணி மாநில செயலாளர் கோபால்சாமி, மாவட்ட செயலாளர்கள் கார்த்தி, பிரேம், நித்யானந்தம், தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் சுசிகலையரசன், ஆதி தமிழர் பேரவை நிறுவனர் அதியமான், மனித நேய மக்கள் கட்சி சார்பில் உமர் உள்பட கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோஷங்களை எழுப்பினார்கள். மாலை 4 மணிக்கு தொடங்கிய மனித சங்கிலி போராட்டம் மாலை 6 மணி வரை நடந்தது. போராட்டக்காரர்கள் சாலையின் ஒரு புறம் கைகோர்த்து நின்றனர். அந்தந்த பகுதியில் நின்றவர்கள் தங்கள் கட்சி கொடிகளை ஏந்தி நின்றனர்.

Next Story