காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி சிவகங்கையில் தி.மு.க.வினர் மனிதச்சங்கிலி போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தி.மு.க. சார்பில் சிவகங்கையில் மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
சிவகங்கை,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி மாவட்ட தலைநகரங்களில் மனிதச்சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று மாநிலம் முழுவதும் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
இதேபோன்று சிவகங்கையில் மாவட்ட தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது. சிவகங்கை பஸ்நிலையம் அருகில் இருந்து சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி தலைமையில் மனிதச்சங்கிலி தொடங்கியது. இதில் தி.மு.க. மாவட்ட செயலாளர் பெரியகருப்பன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் தென்னவன், மாவட்ட துணைச் செயலாளர் மணிமுத்து, நகர செயலாளர் துரைஆனந்த், காங்கிரஸ் மாவட்ட தலைவர் சத்திமூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரம், அருணகிரி, மாவட்ட துணைத்தலைவர் சண்முகராஜன், மகிளா காங்கிரஸ் மாநில பொது செயலாளர் ஸ்ரீவித்யா, நகர தலைவர் பிரபாகரன், இந்திய கம்யூனிஸ்டு சார்பில் குணசேகரன், கண்ணகி, முன்னாள் எம்.எல்.ஏ. தங்கமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் திருமொழி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் தண்டியப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story