காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தி.மு.க.வினர் மனிதச் சங்கிலி போராட்டம்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தி.மு.க.வினர் மனிதச் சங்கிலி போராட்டம்
x
தினத்தந்தி 24 April 2018 4:15 AM IST (Updated: 24 April 2018 2:08 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தல்லாகுளம், திருமங்கலத்தில் தி.மு.க.வினர் மனிதச்சங்கிலி போராட்டம் நடத்தினர்.

மதுரை,

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி, மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி தி.மு.க. உள்பட பல்வேறு கட்சிகள் சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் மனிதச்சங்கிலி போராட்டம் நடந்தது.

மதுரை மாநகர் தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தல்லாகுளத்தில் மனிதச் சங்கிலி போராட்டம் நடந்தது.

பெரியார் சிலையில் இருந்து தமுக்கம் வரையும், அதே போல் பெரியார் சிலையில் இருந்து மாவட்ட கோர்ட்டு வரையும் தி.மு.க. உள்பட தோழமைக் கட்சிகளை பிரமுகர்கள் ஒவ்வொருவரும் கைகோர்த்து நின்றனர்.

மாவட்ட செயலாலர்கள் கோ.தளபதி, வேலுச்சாமி ஆகியோர் தலைமை தாங்கினர்.

அதில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தும் விதமாக கோஷங்களை எழுப்பினர். மேலும் அவர்கள் கருப்பு பலூன்களையும் பறக்கவிட்டனர். நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட மகளிரணி முன்னாள் அமைப்பாளர் சாந்தி, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் பூமிநாதன், தொழிற்சங்க தலைவர் மகப்பூஜான், மதச்சார்பற்ற ஜனதாதள மாநிலப்பொதுச்செயலாளர் ஜான்மோசஸ், வல்லரசு பார்வர்டு பிளாக் தலைவர் அம்மாவாசி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மதுரை தெற்கு, வடக்கு மாவட்டங்கள் சார்பாக மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. திருமங்கலம் தேவர் சிலை அருகே இருந்து பஸ் நிலையம் வரை கைகோர்த்து நின்றனர்.

இதில் முன்னாள் சபாநாயகர் சேடபட்டி முத்தையா, திமுக புறநகர் மாவட்ட செயலாளர்கள்மூர்த்தி எம்.எல்.ஏ., மணிமாறன், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர்கள் ஜெயராமன், ஆலந்தூர் ரவிச்சந்திரன், கம்யூனிஸ்டு கட்சிகளின் மாவட்ட செயலாளர்கள் காளிதாஸ், ராமகிருஷ்ணன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கதிரேசன், மார்நாடு விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் இன்குலாப், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் லதாஅதியமான், சாமிநாதன், மனிதநேய மக்கள் கட்சி பார்வர்டு பிளாக், ஆதிதமிழர் பேரவை, மற்றும் விவசாயிகள் கூட்டணி கட்சிகளின் மாவட்ட, நகர, ஒன்றிய, நிர்வாகிகள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். 

Next Story