நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் ஊரக திட்டத்தில் வேலை கேட்டு கிராம மக்கள் முற்றுகை
ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை கேட்டு நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை,
நெல்லை மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தார்.
நெல்லை மாவட்டம் தேவர்குளம் அருகே உள்ள மேலஇலந்தைகுளம் கிராம மக்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தனர். அவர்கள் தங்களுக்கு 100 நாள் வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் வேலை வழங்க வேண்டும் என்று கூறி தங்களுடைய அடையாள அட்டையுடன் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், மேலஇலந்தைகுளம் கிராம மக்களுக்கு மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தின் கீழ் தற்போது வேலை வழங்கவில்லை. இதனால் நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம். எனவே எங்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
முக்கூடல் அருகே உள்ள வடக்குஅரியநாயகிபுரம் மற்றும் சுற்றுவட்டார ஊர்களை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு 5 வேன்களில் வந்தனர். சாதி பிரிவினையை தூண்டும் வகையில் பொய் வழக்கு போட்டதாக கூறி முக்கூடல் போலீசாரை கண்டித்து அவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுனி மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் 5 பேரை மட்டும் மனு கொடுக்க போலீசார் அனுமதித்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
மேலப்பாளையம் ஆமீன்புரம் மக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து, தாங்கள் வசிக்கும் இடத்திற்கு பட்டா வழங்க வேண்டும் என்று கூறி மனு கொடுத்தனர்.
அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் என்ற மாணவர் அமைப்பினர் மாநில இணை செயலாளர் பிரிதிவிராஜன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், தமிழகத்தில் உள்ள அனைத்து தொடக்கப்பள்ளிக்கூடங்களிலும் தமிழ் வழிக்கல்வியை கட்டாயமாக்க வேண்டும். சிறப்பு வகுப்புகள் என்ற பெயரில் மாணவர்களை மனஉளைச்சலுக்கு ஆளாக்கும் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். பேராசிரியை நிர்மலாதேவி பிரச்சினையில் உயர்நீதிமன்ற மேற்பார்வையில் சிறப்பு விசாரணை குழு அமைக்க வேண்டும் என்று கூறிஉள்ளனர்.
நெல்லை அருகே உள்ள ராஜவல்லிபுரத்தை சேர்ந்த மரச்சாமியார் அர்ச்சுனன் தலைமையில் அந்த பகுதி பெண்கள், மரக்கன்றுகள், தண்ணீருடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், ராஜவல்லிபுரம் பகுதியில் ஏராளமான மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறோம். அங்குள்ள குளத்தில் உள்ள தண்ணீரை மரத்திற்கும், விவசாயத்திற்கும் பயன்படுத்தி வருகிறோம். தற்போது குளத்தை மீன்பாசி குத்தகைக்கு எடுத்தவர்கள் தண்ணீரை வெளியேற்றுகிறார்கள். இதனால் மரக்கன்றுகள் தண்ணீர் இல்லாமல் வாடும்நிலை உள்ளது. எனவே குளத்து நீரை வெளியேற்ற தடை விதிக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
இந்திய சுவிசேஷ லுத்தரன் சபையினர் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து பள்ளிக்கூட தாளாளர் நியமனத்தில் நீதிமன்ற ஆணையை சேரன்மாதேவி கல்வி மாவட்ட அலுவலர் அவமதித்ததாக கூறி அவரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர்.

Related Tags :
Next Story