நெல்லையில் துணிகரம்: தனியார் மதுபான கூடத்தில் ரூ.2 லட்சம் கொள்ளை
நெல்லையில் தனியார் மதுபான கூடத்தில், சமையல் அறை சுவரில் பொருத்தப்பட்டிருந்த மின்விசிறியை கழற்றி உள்ளே புகுந்த மர்மநபர்கள் ரூ.2 லட்சத்தை கொள்ளையடித்துச்சென்றனர்.இந்த துணிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு.
நெல்லை,
நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள பிரபல ஓட்டல் வளாகத்தில் தனியாருக்கு சொந்தமான மதுபான கூடம் (பார்) செயல்பட்டு வருகிறது. இதை பாளையங்கோட்டையை சேர்ந்த தினேஷ் என்பவர் நடத்தி வருகிறார்.
இந்த கூடத்தில் பரமசிவன் என்பவர் மேலாளராக பணியாற்றி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு மதுபான கூடத்தில் பணி முடித்து ஊழியர்கள் சென்றுவிட்டனர். மேலாளர் பரமசிவன், அன்று வசூலான ரூ.2 லட்சத்தை மறுநாள் வங்கியில் செலுத்துவதற்காக கூடத்தில் இருந்த பீரோவில் வைத்து பூட்டிவிட்டு சென்றுவிட்டார்.
நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர்கள், மதுபான கூடத்தின் சமையல் அறையில் புகையை வெளியேற்றுவதற்காக சுவரில் பொருத்தப்பட்டு இருந்த மின்விசிறியை கழற்றிவிட்டு அந்த ஓட்டையின் வழியே உள்ளே புகுந்தனர். பின்னர் அவர்கள், பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ.2 லட்சத்தை கொள்ளையடித்தனர்.
மேலும் அவர்கள், அங்கிருந்த விலை உயர்ந்த மதுபாட்டில்களை ஒரு சாக்கு பையில் கட்டி எடுத்து செல்ல முயன்றனர். ஆனால் முடியாததால் சாக்கு பையை அப்படியே போட்டுவிட்டு அங்கிருந்த விலை உயர்ந்த மதுவை குடித்துவிட்டு பாட்டில்களை போட்டு உடைத்து உள்ளனர். பின்னர் அங்கிருந்த பழங்கள், தின்பண்டங்களை சாப்பிட்டுவிட்டு அதே ஓட்டை வழியாக தப்பிச்சென்று விட்டனர்.
நேற்று காலையில் மதுபான கூடத்தை திறக்க வந்த மேலாளர் பரமசிவன், அங்கு கொள்ளை நடந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்த உதவி போலீஸ் கமிஷனர் வரதராஜன், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் மற்றும் போலீசார் மதுபான கூடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். கைரேகை நிபுணர்கள் வந்து ரேகையை பதிவு செய்தனர்.
இந்த கொள்ளை குறித்து பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பீரோவில் பணம் வைப்பது அங்குள்ள ஊழியர்கள் மற்றும் அங்கு அடிக்கடி வந்து செல்கின்ற நபர்களுக்கு தான் தெரியும் என்பதால் அதன் அடிப்படையில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டு உள்ளனர். மேலும், கூடத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து வருகிறார்கள். மதுபான கூடத்தில் மர்மநபர்கள் கைவரிசை காட்டி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story