சாலை பாதுகாப்பு வாரவிழாவையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் அமைச்சர் தொடங்கி வைத்தார்


சாலை பாதுகாப்பு வாரவிழாவையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் அமைச்சர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 24 April 2018 4:00 AM IST (Updated: 24 April 2018 2:40 AM IST)
t-max-icont-min-icon

சாலை பாதுகாப்பு வாரவிழாவையொட்டி நாகையில் விழிப்புணர்வு ஊர்வலத்தை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தொடங்கி வைத்தார்.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு வார விழா நேற்று தொடங்கியது. விழாவையொட்டி நேற்று வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் நாகை அவுரித்திடலில் இருந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்து கொண்டு, ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்து பேசினார். இதில் ஓட்டுனர் பயிற்சி பள்ளியை சேர்ந்தவர்கள், வட்டார போக்குவரத்து துறை அலுவலர்கள், இருசக்கர வாகன விற்பனை நிலைய முகவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு, சாலை விதிகளை பின்பற்ற கூடிய வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு கோஷமிட்டு சென்றனர்.

குறும்படம்

முன்னதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், நாகை மண்டலம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பதாகைகள் தாங்கிய பஸ் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த அதிநவீன மின்னணு திரைவாகனத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறும்படம் ஆகியவற்றை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பார்வையிட்டார். இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய், வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக துணை மேலாளர் (தொழில்நுட்பம்) சிதம்பரகுமார், உதவி மேலாளர் (விபத்து ஆய்வு) தனபால், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார், சிக்கல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவர் தங்க கதிரவன் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story