கூத்தாநல்லூர் அருகே பெண்ணை தாக்கிய கணவன்-மனைவி கைது
கூத்தாநல்லூர் அருகே பெண்ணை தாக்கிய கணவன்-மனைவியை போலீசார் கைது செய்தனர்.
கூத்தாநல்லூர்,
கூத்தாநல்லூர் அருகே உள்ள வாழச்சேரி காலனி தெருவை சேர்ந்தவர் முருகையன். இவருடைய மனைவி மாரியம்மாள் (வயது35). சம்பவத்தன்று அதே தெருவை சேர்ந்த பிச்சையன், அவருடைய மனைவி கோமதி ஆகியோர் மாரியம்மாளின் வீட்டு வாசலில் நின்று கொண்டு தகாத வார்த்தைகளை பேசிக்கொண்டிருந்தனர். இதை மாரியம்மாள் தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த பிச்சையன், அவருடைய மனைவி கோமதி, மகன் வெங்கடேஷ் ஆகிய 3 பேரும் சேர்ந்து மாரியம்மாளை தாக்கினர்.
இதில் படுகாயம் அடைந்த மாரியம்மாள் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மாரியம்மாளின் கணவர் முருகையன் கூத்தாநல்லூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிச்சையன், கோமதி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள வெங்கடேசை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Related Tags :
Next Story