தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம் 3 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு


தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம் 3 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 24 April 2018 3:37 AM IST (Updated: 24 April 2018 3:37 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி, திருச்செந்தூரில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று மனித சங்கிலி போராட்டம் நடந்தது.

தூத்துக்குடி,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், அதற்கு துணை போகும் மாநில அரசை கண்டித்தும் தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று மனித சங்கிலி போராட்டம் நடந்தது. அதன்படி தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தூத்துக்குடியில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். புதிய மாநகராட்சி அலுவலகம் முதல் டபிள்யு.ஜி.சி. ரோட்டில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் கைகோர்த்து மனித சங்கிலியாக அணிவகுத்து நின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். மாலை 4 மணி முதல் 5 மணி வரை இந்த போராட்டம் நடந்தது.

போராட்டத்தில் தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ஜெகன், மாவட்ட துணை செயலாளர் ராஜ்மோகன் செல்வின், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், ஒன்றிய செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், வேலாயுதபெருமாள், சின்னமாரிமுத்து, காசிவிசுவநாதன், சின்னப்பாண்டியன், கோவில்பட்டி நகர செயலாளர் கருணாநிதி, மாநில காங்கிரஸ் துணை தலைவர் ஏ.பி.சி.வி.சண்முகம், மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன், வடக்கு மாவட்ட தலைவர் சீனிவாசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநிலக்குழு உறுப்பினர் மல்லிகா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் அழகுமுத்துப்பாண்டியன், திராவிடர் கழகம் மாவட்ட தலைவர் பெரியாரடியான், சமத்துவ மக்கள் கழகம் ராஜ்குமார், பெருந்தலைவர் மக்கள் கட்சி மத்திய மாவட்ட தலைவர் ஜான் சாமுவேல் தர்மராஜ், ம.தி.மு.க. மாநில மீனவர் அணி செயலாளர் நக்கீரன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநகர தலைவர் மீராசா, விடுதலை சிறுத்தைகள் கட்சி மத்திய மாவட்ட செயலாளர் அகமது இக்பால், மனிதநேய மக்கள் கட்சி மோத்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் திருச்செந்தூரில் நேற்று மாலையில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. திருச்செந்தூர்- தூத்துக்குடி மெயின் ரோடு தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி முன்பிருந்து திருச்செந்தூர் மேல ரத வீதி வரையிலும் தி.மு.க. கூட்டணி கட்சியினர் சாலையோரம் கைகோர்த்து மனித சங்கிலியாக சுமார் ஒரு மணி நேரம் நின்றனர். அப்போது அவர்கள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

மனித சங்கிலி போராட்டத்துக்கு தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி. ஜெயத்துரை, ஒன்றிய செயலாளர்கள் செங்குழி ரமேஷ், பாலசிங், நவீன், மாடசாமி, சண்முகையா, நல்லமுத்து, பார்த்தீபன், ஜோசப், ரவி செல்வகுமார், நகர செயலாளர்கள் மந்திரமூர்த்தி, ராமஜெயம், மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் ஜெபராஜ், மீனவர் அணி அமைப்பாளர் ஸ்ரீதர் ரொட்ரிகோ, முன்னாள் கவுன்சிலர்கள் மணல்மேடு சுரேஷ், கோமதிநாயகம், ரூபன்,

தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார், முன்னாள் எம்.எல்.ஏ. சுடலையாண்டி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் முகமது அபுபக்கர் எம்.எல்.ஏ., மாநில துணை செயலாளர் இப்ராகிம் மக்கி, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ், ஒன்றிய செயலாளர் வித்யா சுரேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் தமிழினியன், தெற்கு மாவட்ட செயலாளர் முரசு தமிழப்பன், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட துணை செயலாளர் கரும்பன், மாவட்ட குழு உறுப்பினர்கள் நடேச ஆதித்தன், சங்கரகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன், திராவிடர் கழக மண்டல தலைவர் பால ராசேந்திரன், சமத்துவ மக்கள் கழக ஒன்றிய செயலாளர் ஜெயமுருகன் உள்பட ஆயிரக்கணக்கானவர்கள் சாலையோரம் கைகோர்த்து மனித சங்கிலியாக நின்றனர்.

Next Story