குறைந்த விலையில் வீடு வாங்கி தருவதாக ரூ.88 லட்சம் மோசடி


குறைந்த விலையில் வீடு வாங்கி தருவதாக ரூ.88 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 24 April 2018 4:03 AM IST (Updated: 24 April 2018 4:03 AM IST)
t-max-icont-min-icon

குறைந்த விலையில் வீடு வாங்கி தருவதாக கூறி, ரூ.88 லட்சம் மோசடியில் ஈடுபட்டவரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

மும்பை,

மும்பையை சேர்ந்தவர் அஞ்சனா. இவர் காலாசவுக்கி போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்று அளித்தார்.

அந்த புகார் மனுவில், ஈஸ்வர் தாயிடே என்பவர் தன்னிடம் குறைந்த விலையில் வீடு வாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறப்பட்டு இருந்தது.

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், ஈஸ்வர் தாயிடே, அஞ்சனா மற்றும் பரேலில் உள்ள மகாத்மா காந்தி மருத்துவமனை நர்சுகள் என மொத்தம் 29 பேரிடம் இதே பாணியில் ரூ.88 லட்சம் அளவுக்கு மோசடி செய்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் மோசடியில் ஈடுபட்ட ஈஸ்வர் தாயிடே மீது வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடிவருகின்றனர்.

Next Story