மொபட் மீது லாரி மோதிய விபத்தில் தாய் கண்முன்னே மகள் பரிதாப சாவு


மொபட் மீது லாரி மோதிய விபத்தில் தாய் கண்முன்னே மகள் பரிதாப சாவு
x
தினத்தந்தி 24 April 2018 4:07 AM IST (Updated: 24 April 2018 4:07 AM IST)
t-max-icont-min-icon

மொபட் மீது லாரி மோதிய விபத்தில் தாய் கண்முன்னே மகள் பரிதாபமாக இறந்தார்.

பூந்தமல்லி,

திருவேற்காடு, மாதிராவேடு, ஒத்தவாடை தெருவை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி மீனா. இவர்களது மகள் சுசித்ரா (வயது11). இவர் முகப்பேரில் உள்ள ஒரு விடுதியில் தங்கி தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.

ஆண்டு தேர்வு முடிவடைந்த நிலையில் தனது மகளை மீனா மொபட்டில் நேற்று வீட்டிற்கு அழைத்து வந்தார். பூந்தமல்லி நெடுஞ்சாலை, வானகரம் அருகே மொபட் வந்தபோது பின்னால் வந்த லாரி, மொபட் மீது பயங்கரமாக மோதியது. இதில் தாயும் மகளும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.

தாய் கண்முன்னே மகள் சாவு

அப்போது லாரியின் சக்கரம் சுசித்ரா உடல் மீது ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் அவரது தாயார் மீனாவின் கண்முன்னே நிகழ்ந்தது. விபத்தில் மீனாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து போன சுசித்ராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக் கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் டாட்கர்(38), என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

விடுதியில் தங்கி படித்த மகளை நீண்ட நாள் கழித்து வீட்டிற்கு அழைத்து வந்தபோது தாய் கண் முன்னே மகள் இறந்துபோன சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

Next Story