சென்னை அண்ணாநகரில் அடுத்தடுத்து 2 கடைகளில் கொள்ளை
அண்ணா நகரில் ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து 2 கடைகளின் கதவை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
கோயம்பேடு,
சென்னை அண்ணாநகர், ஷெனாய் நகர் பகுதி 8-வது தெருவில் எழுதுபொருள் கடையும், மருந்து கடையும் அருகருகே உள்ளது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் எழுதுபொருள் கடையை மதியமே மூடிவிட்டார்கள். அருகில் உள்ள மருந்து கடையை இரவில் மூடிவிட்டு சென்றனர்.
அந்த கடைகளின் உரிமையாளர்கள் நேற்று காலை வழக்கம்போல கடையை திறக்க வந்தனர். அப்போது அந்த கடைகளின் இரும்பு ஷட்டர்கள் உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். எழுதுபொருள் கடையில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 15 ஆயிரமும், மருந்து கடையில் இருந்த ரூ.60 ஆயிரமும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
போலீஸ் விசாரணை
இதுகுறித்து மருந்துகடை உரிமையாளர் நாராயணன், எழுதுபொருள் கடை உரிமையாளரின் மகன் மாரியப்பன் ஆகியோர் அண்ணா நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story