சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் தொடங்கி வைத்தார்


சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 24 April 2018 4:21 AM IST (Updated: 24 April 2018 4:21 AM IST)
t-max-icont-min-icon

வேலூரில் நடந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார்.

வேலூர்,

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 23-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை சாலை பாதுகாப்பு வாரம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று சாலை பாதுகாப்பு வாரம் தொடங்கியது. வேலூரில் புதிய பஸ்நிலையத்தில் சாலை பாதுகாப்பு வார தொடக்க விழா நடைபெற்றது.

விழாவையொட்டி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பஸ், மோட்டார்சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலெக்டர் ராமன், போலீஸ் சூப்பிரண்டு பகலவன் ஆகியோர் கலந்துகொண்டு கண்காட்சி பஸ்சை பார்வையிட்டனர்.

பின்னர் அவர்கள் கண்காட்சி பஸ் மற்றும் விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

ஊர்வலத்தில் அரசு போக்குவரத்துக்கழக பொது மேலாளர் ரமேஷ், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ராமகிருஷ்ணன், கருணாநிதி, மோகன், செஞ்சிலுவை சங்க செயலாளர் இந்தர்நாத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஊர்வலம் புதிய பஸ்நிலையத்தில் இருந்து புறப்பட்டு, கிரீன்சர்க்கிள், காட்பாடிரோடு வழியாக சென்று பழைய பஸ்நிலையத்தில் முடிவடைந்தது. ஊர்வலத்தில் சென்றவர்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச்சென்றனர்.

இன்று (செவ்வாய்க்கிழமை) காவல்துறை சார்பில் ‘சீட் பெல்ட்’ அணிந்து வாகனங்கள் ஓட்டுவது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

Next Story