வேலூர் மத்திய சிறையில் ராஜீவ்காந்தி கொலை கைதி முருகன் மவுன விரதம்


வேலூர் மத்திய சிறையில் ராஜீவ்காந்தி கொலை கைதி முருகன் மவுன விரதம்
x
தினத்தந்தி 24 April 2018 4:32 AM IST (Updated: 24 April 2018 4:32 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் மத்திய சிறையில் ராஜீவ்காந்தி கொலை கைதி முருகன் நேற்று முதல் மவுன விரதம் இருக்கிறார்.

வேலூர்,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற முருகன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதே வழக்கில் அவருடைய மனைவி நளினி வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனால் அவர் தலைமுடி மற்றும் தாடி வளர்த்து சித்தர் போல் காட்சியளிக்கிறார். மேலும் எப்போதும் காவி உடை அணிந்தே இருக்கிறார். முருகன் அறையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் செல்போன்கள் கைப்பற்றப்பட்டன. இதுதொடர்பான வழக்கு விசாரணை, வேலூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 1-ல் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு சம்பந்தமாக 29-வது முறையாக கடந்த 19-ந் தேதி முருகன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் கோர்ட்டுக்கு வரும்போதெல்லாம் காவி உடையுடனே வந்து சென்றார். கோர்ட்டில் செல்போன் வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டவர்களிடம் முருகனே குறுக்கு விசாரணை நடத்தினார்.

அதைத்தொடர்ந்து வழக்கு விசாரணை 24-ந் தேதிக்கு (இன்று) ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், வேலூர் மத்திய சிறையில் முருகன் திடீரென நேற்று காலை முதல் மவுன விரதம் தொடங்கியிருக்கிறார். மனஅமைதிக்காக முருகன் மவுன விரதம் இருப்பதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story