திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சம்


திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சம்
x
தினத்தந்தி 24 April 2018 4:43 AM IST (Updated: 24 April 2018 4:43 AM IST)
t-max-icont-min-icon

காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடிகள், தங்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த கூடப்பாக்கம் பெரிய தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கர்(வயது 26). டிரைவரான இவரும், அதே பகுதியை சேர்ந்த புஷ்பலதா(22) என்பவரும் கடந்த 7 ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் காதலுக்கு இருவீட்டு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

புஷ்பலதாவின் பெற்றோர், அவருக்கு வேறு இடத்தில் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்பாமல் வைத்து இருந்தனர். இதற்கிடையில் வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி கடந்த 8-ந் தேதி திருத்தணி முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

தஞ்சம் அடைந்தனர்

காதல் திருமணம் செய்து கொண்ட அவர்கள், இரு வீட்டு பெற்றோர்களால் தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது என்று கருதினர். இதையடுத்து காதல் ஜோடிகள் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர்.

பின்னர் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தியிடம் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். 

Next Story