மூதாட்டியை ஏமாற்றி ஏ.டி.எம். கார்டில் இருந்து பணத்தை எடுத்த வாலிபர் கைது
திருக்குவளையில், மூதாட்டியை ஏமாற்றி ஏ.டி.எம். கார்டில் இருந்து பணத்தை எடுத்த கர்நாடக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வேளாங்கண்ணி,
நாகை மாவட்டம் திருக்குவளை தென்புரம் பகுதியை சேர்ந்தவர் பட்டு(வயது 65). இவர் திருக்குவளையில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். சம்பவத்தன்று இவர் தனது வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுப்பதற்காக அங்குள்ள ஏ.டி.எம். மையத்திற்கு சென்றார்.
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மர்ம நபர் ஒருவர், தான் பணம் எடுத்து தருவதாக கூறி பட்டுவிடம் இருந்து ஏ.டி.எம். கார்டையும், ரகசிய எண்ணையும் பெற்றுக்கொண்டு ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுப்பது போல் நடித்து பட்டுவின் கணக்கில் பணம் இல்லை என்று கூறி அவரது கார்டை தனது கையில் மறைத்து வைத்துக்கொண்டு மற்றொரு ஏ.டி.எம். கார்டை கொடுத்தார். பின்னர் அங்கிருந்து அந்த மர்ம நபர் சென்று விட்டார்.
இதனை கவனித்துக்கொண்டு இருந்த மற்றொருவர், நடந்த சம்பவம் பற்றி பட்டுவிடம் கூறினார். உடனே பட்டு இதுகுறித்து வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இந்த நிலையில் அந்த மர்ம நபர், அந்த வங்கிக்கு அருகே உள்ள மற்றொரு ஏ.டி.எம். மையத்தில் பட்டுவின் கணக்கில் இருந்து ரூ.ஆயிரத்தை எடுத்துக்கொண்டு வந்து கொண்டு இருந்தார்.
உடனே வங்கி அதிகாரிகள் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தியதில் அந்த நபர் போலி ஏ.டி.எம். கார்டுகளை வைத்து வங்கியில் பண மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதையடுத்து வங்கி அதிகாரிகள் அவரை திருக்குவளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சவுந்தரராஜனிடம் ஒப்படைத்தனர். பின்னர் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர், கர்நாடக மாநிலம் பெங்களூரு மாச்சா அல்லி கேட் மாகடி மெயின் ரோடு பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார்(24) என்பது தெரிய வந்தது.
மேலும் திருக்குவளை பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், திருப்பூரில் வேலை பார்த்து வந்தபோது, சுரேஷ்குமாருக்கும் அந்த பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டதும் தற்போது அந்த பெண் திருக்குவளையில் உள்ளதால் அவரை பார்க்க வந்தபோது பண மோசடியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
மேலும் சுரேஷ்குமார் இதுபோல் பல்வேறு இடங்களில் போலி ஏ.டி.எம். கார்டுகளை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து திருக்குவளை போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ்குமாரை கைது செய்தனர்.
மேலும் சுரேஷ்குமாரிடம் இருந்து பட்டு கணக்கில் இருந்து எடுத்த ரூ.ஆயிரம் மற்றும் 5-க்கும் மேற்பட்ட போலி ஏ.டி.எம். கார்டுகளையும் , போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Tags :
Next Story