கோவில்பட்டியில் ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம்


கோவில்பட்டியில் ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 25 April 2018 2:30 AM IST (Updated: 25 April 2018 12:44 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

கோவில்பட்டி, 

கோவில்பட்டியில் ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

விழிப்புணர்வு ஊர்வலம்

கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் போக்குவரத்து அதிகாரி மன்னர்மன்னன் ஏற்பாட்டில், மோட்டார் சைக்கிள் ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலம் கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு தொடங்கியது. ஊர்வலத்தை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ் தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட இந்த மோட்டார் சைக்கிள் ஊர்வலத்துக்கு போக்குவரத்து ஆய்வாளர் அமர்நாத் தலைமை தாங்கினார்.

துண்டு பிரசுரம்

இந்த ஊர்வலமானது எட்டயபுரம் ரோடு, ஏ.கே.எஸ். தியேட்டர் ரோடு வழியாக சென்று, கோவில்பட்டி பயணிகள் விடுதி முன்பு முடிவடைந்தது. பின்னர் அங்கு ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்பட் டது. இந்த ஊர்வலத்தில் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுடலைமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story