அவினாசி அருகே வீட்டின் முன் நின்று கொண்டிருந்த மானை கொன்ற தொழிலாளி கைது
அவினாசி அருகே வீட்டின் முன் நின்று கொண்டிருந்த மானை கொன்ற தொழிலாளியை வனத்துறையினர் கைது செய்தனர்.
அவினாசி,
திருப்பூர் மாவட்டம் அவினாசி ஒன்றியம் புதுப்பாளையம், கோதபாளையம், வண்ணாத்தாங்கரை ஓடை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான புள்ளிமான்கள் வசித்து வருகின்றன. தற்போது, கோடைகாலம் என்பதால் இந்த பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் தண்ணீர் தேடியும், உணவுக்காகவும் மான்கள் கூட்டம், கூட்டமாக குடியிருப்பு பகுதிக்கும், அங்குள்ள விவசாய தோட்டங்களுக்கும் வருவது வாடிக்கை.
இவ்வாறு வரும் மான்களை தெருநாய்கள் விரட்டி கடித்து குதறும். சில மான்கள் விவசாய கிணற்றில் விழுந்து தத்தளிக்கும். இதில் நாய்களிடம் கடிபட்டும், கிணற்றில் விழுந்தும் உயிருக்கு போராடும் மான்களை அங்குள்ள பொதுமக்களும், சமூகஆர்வலர்களும் மீட்டு அவற்றுக்கு சிகிச்சை அளித்து, உணவுகளையும், தண்ணீரையும் கொடுத்து பாதுகாத்து, வனத்துறைக்கு தகவல் கொடுப்பார்கள். அவர்கள் மானை மீட்டு அவற்றை வனப்பகுதியில் விடுவார்கள்.
இந்தநிலையில் அவினாசியை அடுத்த ராமநாதபுரம் பகுதிக்கு புள்ளிமான்கள் கூட்டம் நேற்று காலை உணவு தேடி வந்துள்ளன. இதில் 2 வயதுடைய புள்ளி மான் ஒன்றை அந்த பகுதியில் உள்ள தெருநாய்கள் கடித்து துரத்தின. இதை பார்த்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
அதற்குள் அந்த மான் நாய்களிடம் இருந்து தப்பி, அப்பகுதியில் உள்ள சக்திவேல் (வயது 22) என்ற கூலித்தொழிலாளியின் வீட்டின் முன் வந்து சோர்ந்து நின்றது. இதை பார்த்த சக்திவேல் மானை பிடித்து தனது வீட்டிற்குள் கொண்டு சென்று, அதை கத்தியால் வெட்டி கொன்றுவிட்டார்.
இதற்கிடையே திருப்பூர் வனச்சரகர் மகேஸ், வனவர் சுப்பையா, மான் பாதுகாவலர்கள் சண்முகம், பிரேம்குமார், தோட்டக்காவலர் நாகராஜ் ஆகியோர் நாய்களிடம் சிக்கிய மானை தேடி அந்த பகுதிக்கு வந்தனர். அப்போது, அந்த மானை சக்திவேல் வீட்டிற்குள் அழைத்துச்சென்றது தெரியவந்தது.
இதைதொடர்ந்து சக்திவேலின் வீட்டிற்குள் வனத்துறையினர் சென்று பார்த்தனர். அப்போது, அவர் மானை கொன்று, அதன் இறைச்சியை எடுக்க முயற்சி செய்து கொண்டிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வனத்துறையினர், தொழிலாளி சக்திவேலை கைது செய்து, மானின் உடலை மீட்டனர். பின்னர் அவர் அவினாசி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Tags :
Next Story