நிர்மலாதேவி விவகாரம்: பேராசிரியர் முருகன் கைது
பேராசிரியர் நிர்மலாதேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் பேராசிரியர் முருகன் நேற்று கைது செய்யப்பட்டார்.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியர் நிர்மலாதேவி அந்த கல்லூரியை சேர்ந்த 4 இறுதியாண்டு மாணவிகளை செல்போன் மூலம் தவறான பாதைக்கு அழைத்ததாக புகார் எழுந்ததை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
இவ்வழக்கில் விசாரணை மேற்கொண்டுள்ள சி.பி.சி.ஐ.டி. போலீசார் நிர்மலாதேவியை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்து வருகிறார்கள்.
வழக்கின் விசாரணை அதிகாரியான போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்வரி, நிர்மலாதேவியிடம் தொடர் விசாரணை நடத்தியதில் அவர் தன்னை செல்போனில் பேசத் தூண்டியதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோர் பெயர்களை மட்டும் கூறினார். தொடர்புடைய உயர் அதிகாரிகள் யார் என்று தெரிவிக்கவில்லை.
சி.பி.சி.ஐ.டி. போலீசார், நிர்மலாதேவி செல்போனில் தொடர்பு கொண்டவர்களை கடந்த 20-ந் தேதி முதல் நேற்று வரை அழைத்து விசாரணை நடத்தியதுடன் தேவாங்கர் கல்லூரியின் முன்னாள் மற்றும் இந்நாள் நிர்வாகிகள் ஆகியோரிடமும் விசாரணை நடத்தினர்.
இந்த பிரச்சினையில் போலீசார் தேடி வந்த பேராசிரியர் முருகன் நேற்று முன்தினம் காமராஜர் பல்கலைக்கழக வளாகத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் சிக்கியதைத் தொடர்ந்து விருதுநகர் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். நேற்று முன்தினம் நள்ளிரவு வரை நடந்த விசாரணை நேற்றும் தொடர்ந்தது.
விசாரணையில் முருகன் மீது நிர்மலாதேவி கூறியிருந்த தகவலுக்கு முகாந்திரம் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். பாலியல் குற்றத்துக்கு தூண்டுதல், குற்றம் செய்ய முயற்சி, தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
நிர்மலாதேவி மீது ம் இதேபிரிவின் கீழ் வழக்குபதியப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட பின்னரும் அவரிடம் விசாரணை தொடர்ந்தது.
இந்த நிலையில் பேராசிரியர் நிர்மலாதேவி சுட்டிக்காட்டிய மற்றொரு பேராசிரியரான கருப்பசாமியை தேடும் பணியில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் குழுவினர் தீவிரம் காட்டினர். நேற்று முன்தினம் நள்ளிரவு வரை அருப்புக்கோட்டை, திருச்சுழி, நரிக்குடி மேலேந்தல் பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்ட போலீசாரிடம் நள்ளிரவில் பேராசிரியர் கருப்பசாமி சிக்கியதாக கூறப்படுகிறது. எனினும், அவரை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு அழைத்து வராத நிலையில் அந்த தகவலை உறுதி செய்ய முடியாத நிலை தொடர்கிறது.
அவர் வேறு ஏதாவது ஒரு இடத்தில் வைத்து விசாரணை செய்யப்படுகின்றாரா என்பதையும் உறுதி செய்யமுடியவில்லை. ஆனாலும் நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் அவரை தேடும் பணியை தொடராததால் அவர் போலீஸ் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு இருக்கலாம் என நம்பப்படுகிறது.
இந்த நிலையில் தேவாங்கர் கல்லூரி செயலாளர் ராமசாமி, பேராசிரியர் கந்தசாமி ஆகியோர் நேற்று மதியம் மீண்டும் விசாரணைக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அலுவலகத்தில் ஆஜரானார்கள். கல்லூரி ஊழியர்கள் பல்வேறு ஆவணங்களை ஆய்வுக்கு கொண்டு வந்தனர். கிருஷ்ணன் கோவிலை சேர்ந்த தங்கப்பாண்டியன் என்பவரும் நேற்று சி.பி.சி.ஐ.டி. அலுவலகம் வந்தார். அவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
நிர்மலா தேவியின் 5 நாள் போலீஸ் காவல் முடியும் நிலையில் இன்று (புதன்கிழமை) மதியம் 2 மணிக்குள் அவர் சாத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கைதான பேராசிரியர் முருகன், நேற்றிரவு 9.30 மணிக்கு சாத்தூர் 2-வது குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கீதா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை காவலில் வைக்க, மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

Related Tags :
Next Story