காஞ்சீபுரத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
காஞ்சீபுரத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் பொன்னையா தொடங்கி வைத்தார்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் நடந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் பொன்னையா தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி, மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி நூர்முகமது, காஞ்சீபுரம் வருவாய் கோட்ட அதிகாரி ராஜூ, மண்டல போக்குவரத்து அதிகாரி ஆர்.பி.செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டு சுங்க சாவடியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சங்கம் இணைந்து நடத்திய பேரணியை ஆர்.டி.ஓ. பாஸ்கர், செங்கல்பட்டு தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
குன்றத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் கோவூரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து தொடங்கிய மோட்டார்சைக்கிள் பேரணியை ஆர்.டி.ஓ. சுந்தரேசன் தொடங்கி வைத்தார். இதில் ஓட்டுனர் உரிமம் பெற வந்த 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story