தென்காசி தாலுகா அலுவலகத்தில் முதியோர் உதவித்தொகை கேட்டு முற்றுகை போராட்டம்


தென்காசி தாலுகா அலுவலகத்தில் முதியோர் உதவித்தொகை கேட்டு முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 25 April 2018 2:30 AM IST (Updated: 25 April 2018 1:37 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி தாலுகா அலுவலகத்தில் முதியோர் உதவித்தொகை கேட்டு முற்றுகை போராட்டம் நடந்தது. அப்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தென்காசி, 

தென்காசி தாலுகா அலுவலகத்தில் முதியோர் உதவித்தொகை கேட்டு முற்றுகை போராட்டம் நடந்தது. அப்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

முதியோர் உதவித்தொகை

தமிழக அரசு சார்பில் முதியோர் உதவித்தொகை, திருமண உதவித் தொகை, ஊனமுற்றோர் உதவித்தொகை என பல்வேறு உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் கடந்த சில ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த முதியோர் உதவித்தொகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனை வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி பல்வேறு பேராட்டங்கள் நடந்து வருகின்றன. நேற்று மதியம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் தென்காசி தாலுகா அலுவலகத்தில் முற்றுகையிட்டனர். அப்போது போராட்டம் நடத்தியவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்துக்கு மாவட்டக்குழு உறுப்பினர் பால்ராஜ் தலைமை தாங்கினார். கிளை செயலாளர் ராம மூர்த்தி, வட்டாரக்குழு உறுப்பினர் கிருஷ்ணன், வார்டு செயலாளர் சாகுல் அமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி தாலுகாவுக்கு உட்பட்ட சுந்தரபாண்டியபுரம், பாட்டாக்குறிச்சி, இடைகால், மேலகரம் பகுதியில் இருந்து ஏராளமானவர்கள் இந்த பேராட்டத்தில் கலந்து கொண்டனர்.

22 ஆயிரம் பேர்

தென்காசி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 22 ஆயிரம் பேருக்கு முதியோர் உதவித் தொகை வழங்கப்பட்டு வந்தது. தற்போது 8 ஆயிரம் பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. எனவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அனைவருக்கும் முதியோர் உதவித் தொகை வழங்க வேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

Next Story