எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 27-ந் தேதி நடக்கிறது
தூத்துக்குடி மாவட்ட எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 27-ந் தேதி நடக்கிறது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 27-ந் தேதி நடக்கிறது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
குறைதீர்க்கும் கூட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாதத்திற்கான குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 27-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது.
கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு சிலிண்டர் வினியோகஸ்தர்களும், மத்திய அரசின் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகளும் கலந்து கொள்ள உள்ளனர். ஆகையால் எரிவாயு பயன்படுத்தும் நுகர்வோர், தங்கள் குறைகளை மனுவாக தட்டச்சு செய்தோ அல்லது தெளிவாக எழுதியோ மாவட்ட வருவாய் அலுவலரிடம் நேரில் அளிக்கலாம்.
குறைகள்
கூட்டத்தில் பெயர் மாற்றம், புதிய எரிவாயு சிலிண்டர் வழங்குவதில் கால தாமதம், எரிவாயு வினியோகஸ்தர்களின் சேவையில் குறைபாடுகள், டெபாசிட் தொகை திரும்ப பெறுதல், புதிய இணைப்பு கோரியதன் நிலை, எரிவாயு சிலிண்டருக்கான மானியம் உரிய வங்கி கணக்கில் உரிய காலத்தில் வரவு வைக்கப்படாதிருத்தல், எரிவாயு சிலிண்டர் வினியோகம் செய்யும் நபர்கள் மீது ஏதும் குறைபாடுகள் மற்றும் எரிவாயு பயன்படுத்தும் நுகர்வோரை பாதிக்கும் எந்த குறைகளையும் எடுத்துக்கூறி தீர்வு காணலாம். ஆகையால் பொதுமக்கள், எரிவாயு நுகர்வோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story